
இன்றைய தினம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டம் சென்றுள்ளார்.
தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்கள் இன்று கிளிநொச்சி நகர் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது கிளிநொச்சி நகர மையப்பகுதியான வர்த்தக நிலையங்கள் மற்றும் கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் தமக்கு இத்தேர்தலில் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களை தனது பிரச்சார நடவடிக்கைகளின் போது தவிர்த்துள்ளார்
என்பது இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
எனினும் எம் ஏ சுமந்திரன் அவர்களுடனான தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஈடுபடுவதை அன்மைக்காலமாக தவிர்த்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடும் விமர்சனங்களே இதற்கு காரணம் என நம்பப்படுகின்றது.
சுமந்திரன் அவர்களுக்கான மக்கள் ஆதரவு கிளிநொச்சி மாவட்ட நகரப் பகுதியில் பிரதிபலிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.