ஏப்ரல் 11 க்கு பின்னர்,வடகொரிய அதிபர் தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் நேற்று வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்,மே தின கொண்டாட்டங்கள் மற்றும் தொழிற்சாலை திறப்பு ஒன்றில் பங்கேற்றுள்ளார்.வடகொரிய அதிபர் மரணமடைந்துவிட்டார் என்றும் கடுமையான நோயில் விழுந்து சாவிற்கு போராடி கொண்டுள்ளார் என்றும் செய்திகள் வந்த நிலையில் ,நேற்று கிம் ஆர்ப்பாட்டமில்லாமல் மே தினத்தில் பங்கெடுத்துள்ளதாக தகவல்களை வடகொரிய அரசு வெளியிட்டுள்ளது.


எனினும் கிம் ஜான் உன் தொடர்பில் வெளிவந்த புகைப்படங்கள் தொடர்பில் ஒரு பக்கம் சந்தேகங்களையும் உண்டு பண்ணியுள்ளது.வழக்கமாக அவர் அணியும் கைகடிகாரம்,உடையில் அணியும் Badge ஐ காணகிடைக்கவில்லை.

உலகில் வெடிக்காத ஏவுகணைகளை காட்டி மேற்கத்தேய மீடியாக்களினால் பரப்பட்டு மேற்குலக மக்களை பயத்தில் உறைய செய்து கொண்டிருந்த ஒருவர்,ஒரு நல்ல தலைவருக்கு சொல்லுக்கு முன் செயல் இருக்கவேண்டும்.இதுவரை இவர் அவ்வாறு எதுவுமே செய்ததில்லை,மேற்குல மீடியாவின் பசிக்கு இரையாகி கொண்டிருந்தார்.இன்று இருக்காரா இல்லையா என்பதை கூட மேற்குல ஊடகங்கள் தீர்மானிக்கும் நிலைக்கு வந்தமைக்கு முழுக்க முழுக்க இவர்தான் காரணமாக இருக்கலாம்.