கொழுத்தினால் அடங்கிடுமா தமிழன் தாகம்?

111

யாழ் நல்லூரில் அமைந்துள்ள கிட்டு பூங்காவின் முகப்பு ஞாயிறு இரவு 10 மணியளவில் இனந்தெரியாதோரால் எரித்தழிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதியிலிருந்து செம்மணிக்குச் செல்லும் பிரதான வீதியின் முத்திரைச் சந்தி பகுதியில் புலிகளால் உருவாக்கப்பட்ட இந்த கிட்டு பூங்கா பின்பு, டக்ளஸ் தேவானந்தாவினால் ‘சங்கிலியன் பூங்கா’ என்று பெயர் மாற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது.

பின்பு, மீண்டும் பராமரிப்பின்றி சிதைவடைந்த ஒரு பற்றைக் காடாக மாறியிருந்த அதனை மீண்டும் கிட்டு பூங்காவாக மீள நிர்மாணிக்க வேண்டும் என மாநகர முதல்வர் மணிவண்ணன் விரும்பியிருந்தார். இந் நிலையிலேயை பூங்காவுக்கு எரியூட்டப்பட்டுள்ளது.

தற்போது யாழ் நகரில் அரச ஆதரவு ஆவா குழுவைச் சேர்ந்த அருண் சித்தார்த் என்பவரது அடாவடி அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.