அண்ணன் பிரதமர்,தம்பி ஜனாதிபதி,22 குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள்.கேட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் பெற்றாயிற்று.
இத்தனையும் கொடுத்த சிங்கள மக்களுக்கே இவர்கள் எதுவும் செய்யப் போவதில்லை.இதற்கு முன்னரும் செய்ததில்லை.
அப்படியிருக்க இவர்கள் தமிழ் மக்களுக்கும் ஏதும் செய்வாhகள்; என்று எப்படி சம்பந்தர் ஐயா நம்புகிறார்? உண்மையில் நம்புகிறாரா? இல்லை எதுவும் நடக்காது என்று தெரிந்தும் சும்மா அடித்து விடுகிறாரா? இருக்கிறவரை அவருக்கும் பொழுது போகவேண்டுமென்று…
எதைப் பெற முடியும் என்று நம்பி அரசுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்று ஐயா கூறுகிறார்.அவர்களுக்கு இவர்கள் தேவையில்லை,இவர்களுக்குதான் அவர்கள் தேவை,
தேவையானால் தனக்கு சொகுசு பங்களா பெற முடியும். சுமந்திரனுக்கு சிங்கள STF பொலிஸ் பாதுகாப்பு பெற முடியும்.
ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு ம – – ம் பெற முடியாது!