கொரானாவும் கருணாவும்…

85

ஒரே இரவில் ஆயிரகணக்கான சிங்கள இராணுவத்தை கொலை செய்தேன்,கொரானாவை விட கொடுமையானவன் என தேர்தல் கூட்டமொன்றில் பேசிய கருணாவுக்கு எதிராக பலத்த கண்டன குரல்கள் தென்னிலங்கையில் எழவே,சிங்கள அரசு CID விசாரணைக்கு வந்து ஆஜராகுமாறு கருணாவுக்கு அழைப்பு விடுத்தது.இதனிடையில் சுகவீனம் காரணமாக உடம்பு முடியவில்லை என்று கருணா தனது சட்டதரணி மூலம் அறிவித்துள்ளதுடன்,சுகமானதும் தானாக வந்து ஆஜராவதாக CIDக்கு எழுத்து மூலம் கொடுத்துள்ளதாக பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கருணா தெரிந்தோ தெரியாமலோ தான் கொரானாவை விட கொடுமையானவன் என்று கூறியுள்ளமை அவருக்கே இன்று ஆப்பாக மாறியுள்ளதுடன்,தமிழர் போராட்ட வரலாற்றில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த துரோகி,சிங்கள அரசு போட்ட எலும்பு துண்டுகளை இதுவரை சாப்பிட்டு வந்த நிலையில்,இன்று சிங்கள அரசிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.தேசிய பட்டியல் மூலமான எம்பி பதவி,அமைச்சு பதவியை பெற கடும் பிரயத்தனம் மேற்கொண்ட நிலையில்,அதற்கு கோட்டா அரசு உடன்பட மறுத்து கைவிட்டுள்ளதால் மனமுடைந்து தேர்தலில் குதித்துள்ளடதுடன்,இடையில் தனது மனைவி மகளையும் மஹிந்தவிடம் அரசியல் தூது விட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.கோட்டாபாய,மஹிந்தவை ஒரு பெயருக்கு பிரதமராக வைத்திருந்து சிறுபான்மையினர்,சிறிய விடயங்களை அவர் மூலம் கையாண்டு கொண்டுள்ளதும் சிங்கள இனவாத அரசியலும் அவர்களின் உண்மை முகமும் ஒரே இரவில் பல ஆயிரம் இராணுவத்தை கொன்ற கருணாவுக்கு தெரியாமல் போனது வருத்தங்கள்தான்.

கருணா,தமிழர்களுக்கு பல வருடங்கள் முதலே பிடித்த கொரானா,இன்று கொரானாவுடன் வாழ பழகுங்கள் என்று சொல்வது போன்று சில சிறுபான்மை அறிவாளிகள் இன்று கருணாவுடன் வாழ பழகி கொள்கின்றனர்.சார்ந்தோர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.மருந்தாக டொனால்ட் ரம்க கூறிய ஹைடோகுளோ மருந்தை மூன்று நேரம் உட்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றீர்கள்.

நன்றி பொன் அம்பலத்தார்