குடாரப்பு தரையிறக்கம் – அனுபவப்பகிர்வு 01

148

ஆனையிறவுப் பெருந்தளத்துக்கான விநியோக வழிகளை ஊடறுத்து துண்டாடி ஆனையிறவுக்கு பின்னால் ஒரு Cut out போடப்படும்.
அஃதே,

ஆனையிறவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து உதவி கிடைக்காமல் தடுப்பதற்கு Cut off போடப்படும்.

இந்த Cut out இற்கும் Cut off இற்கும் இடையே அமையப்போகும் ஒரு குறுகலான நிலத்தில் ஒரு களமுனை வைத்தியசாலையினை அமைக்கப்போகின்றோம் என்பது எமக்கு முன்பே விளங்கியது.

அதிக குருதிப் பெருக்கு( Sever Hemorrhage) ஏற்பட்டவர்களுக்கு குருதியையும் அதிகமாக எடுத்துச் செல்லவேண்டும் என்பது எமக்கு உறைத்தது.

குருதியை சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாக்க முடியாது.

செங்குருதியை பாதுகாத்து வைப்பதற்காய் சிறிய குளிர்சாதன பெட்டியையினையும்(Fridge) வேறு களமுனை வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதுதான் வழமை.

குளிர்சாதன பெட்டிக்கான மின் விநியோகம் செய்வதற்கு சின்னஞ் சிறிய ஜெனரேட்ட்டர்களை பயன்படுத்துவோம்.

சின்ன ஜெனரேட்ட்டர் சத்தம் சிறியதாயினும் காவலரண்களைவிட்டு வெளியே வேவு நடவடிக்கையில் ஈடுபடும் எதிரியின் காதுகளில் வீழ்ந்துவிடாது தடுப்பதற்காக அதற்கென தனியான சின்னஞ் சிறிய கிடங்கு வெட்டி அதனுள் வைத்து ஜெனரேட்ட்டரை பாதுகாப்போம்.

இதனை முன்னெச்சரிக்கையான நடவடிக்கையையும் தாண்டி எமை மோப்பம் பிடித்த எதிரியின் அணி ஒன்று 1998 ஆம் ஆண்டு ஜெயசிக்குறுய் காலத்தில் புளியங்குளத்தில் எமது களமுனை வைத்தியசாலையை தாக்கிய சம்பவமும் அதனால் களமருத்துவர் ஒருவர் விழுப்புண் அடைந்த பட்டறிவும் எம்மிடம் இருந்தது.

ஆனால் முற்றிலும் மாறுபட்ட இந்த தாக்குதலுக்கு ஜெனரேட்டர்களையும் குளிர்சாதனப் பெட்டியையும் நினைத்தே பார்க்க முடியாது.

ஒரு வழியாக கடல்வழி எமது வடமராட்சி கிழக்கின் நெய்தல் நிலத்தில் தரை இறங்கபோகும் நாங்கள் குளிர்சாதன பெட்டியையினையும் ஜெனரேட்ட்டரையும் காவிச்சென்றாலும்
அந்த நெருக்கமான
களமுனைக்கு அது சாத்தியமில்லை.

குளிர்சாதனப் பெட்டிக்குப்
பதிலாக கூல் பொக்ஸ் ஒன்றில் எல்லா குருதி வகையை சேர்ந்தவர்களுக்கும் ஏற்றக் கூடிய(O -) ஓ நெகடிவ் குருதிகளை எம்முடன் வைத்திருந்தோம்.

ஆனாலும், கடல்வழி விநியோகத்தினை எதிரி என்ன விலை கொடுத்தாவது தடுப்பான் என லீமா கூறியதும் இன்னும் இரண்டு

தொடரும்…⚓️♟🖌

கூல்_பொக்‌ஷ்(cool-box) களில் கொஞ்சம் அதிகமாகவே ஐஷ்(Ice cubes) கட்டிகளை இட்டு எடுத்துச் சென்றோம்.

தரைவழிப்பாதையை தீபன் அண்ணா உடைத்து விழுப்புண் அடைந்த போராளிகளை பின்னுக்கு அனுப்பும் வரை எமது மக்கள் உவந்த அந்த செங்குருதி 🩸செங்களமாடிய விழுப்புண் அடைந்த வீரர்களின் உயிர்களைக் காத்து நின்றது.

பகிர்பவர் : போராளி மருத்துவர் தணிகை