நாயன்மார்கள் சைவத்தையும் ஆழ்வார்கள் வைணவத்தையும்,அசோக அரச வம்சம் புத்த த்தையும்,மிசனரிகள் கிறிஸ்தவத்தையும் பரப்பினார்கள் – வரலாற்று புத்தகங்கள்
ஒரு கருத்தியல் எம் மண்ணில் பரப்பப்பட்டது என சொல்லும் போதே அது நமக்கு சம்பந்தம் இல்லாதது என தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்து சைவம் வைணவம் கிறிஸ்தவம் என பேசிகொண்டு இருப்பதே மூடத்தனம்
#நாயன்மார்கள் #ஆழ்வார்கள் #மிசனரிகள்
எங்காவது குலதெய்வ வழிபாடு பரப்பப்பட்டது என கேள்விப்பட்டது உண்டா? இல்லை ஏனெனில் இங்கு ஒவொருத்தனுக்கும் தனித்தனியே குலதெய்வங்கள் இருக்கிறது,
உங்களை படைத்ததுதா உங்களுக்கு கடவுள்,உங்களை படைத்தது,உங்கள் முன்னோர்களின் ஒரு மரபு தொடர்ச்சிதான்,அவற்றை வணங்குவதும் அதை காக்க காலத்துக்கு காலம் போராடியவர்களையும் சேர்த்து வணங்குவதே முறையானது.. நீங்கள் மதம் என்று வணங்கும் ஒவ்வொரு மத,மார்க்கங்களும் யாரோ ஒரு கும்பலின் முன்னோர்கள்தான்…அவரவருக்கு என வணங்க முன்னோர்கள் மரபு தொடர்ச்சி இருக்கும் போது,ஆக்கிரமிப்பு கும்பல்கள்…மற்றவர்களை அடிமைப்படுத்தி தங்கள் முன்னோர்களையே எல்லாரும் வணங்க வைக்கின்றனர்… இருக்கும் அத்தனை மதங்களும் முன்னோர் வழிபாடுகள்தான்,ஆனால் அடுத்தவர்களின் முன்னோர்கள்… எவ்வாறு தமிழர்களின் வாழ்வியலாக இருந்த சூரிய ஒளியை அதிகம் உறிஞ்சி நீரை சிறிதாக எடுக்கும் சிறுதானியங்கள் ஒதுக்கப்பட்டு,நீரை அதிகமாக எடுக்கும் பணப்பயிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இன்று சோறு தான முக்கியம் என்று பேசி திரியும் தமிழர்கள் போலவே,மதமும் தமிழர்களின் மரபுதொடர்ச்சியான குலதெய்வங்களை சிறுகோவில்களாக சிறுமைப்படுத்தி,தமது பெருங்கோவில்களை திணிக்கப்பட்டு மக்கள் திசைதிருப்பட்டுள்ளனர்.அசலை விட போலிகளுக்கே மினுமினுப்பு அதிகமாக இருக்கும்.கூட்டம் சேர்வது எல்லாம் சரியான இடம் என்று சொல்லமுடியாது.
எது இயற்கையானது என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்,
ஒரு பேப்பர் வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிய…