எதிர்த் தரப்பினர் மீது அவதூறுகளை அள்ளி வீசி அரசியல் செய்யும் அநாகரீகம் வடக்கில் அதிகரித்துள்ளது – சந்திரகுமார்!

தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் மக்கள் முன் தாங்கள் கடந்த காலத்தில் செய்த வற்றையும் எதிர்காலத்தில் செய்யப் போகின்ற வற்றையும் சொல்லி வாக்குகள் கேட்பதற்கு பதிலாக எதிர்த் தரப்பினர் மீது அவதூறுகளை அள்ளி வீசி அரசியல் செய்யும் அநாகரீகம் வடக்கில் அதிகரித்துள்ளது. என கேடய சின்னத்தில் சுயேச்சை குழு 5 இல் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ் பருத்தித்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

மக்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வது என்பது தங்கள் சார்பாக அவர்கள் செயல்பட வேண்டும். பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே. ஆனால் தமிழர் அரசியலில் எத்தனை பேர் உண்மையாக வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக பணியாற்றுகின்றனர்? என கேள்வி எழுப்பியவர். மக்களும் தாங்கள் வாக்களித்து தெரிவு செய்துவிட்ட பிரதிநிதிகளை நோக்கிய கேள்வி கேட்பதில்லை மக்களின் இந்தப் பலவீனமே தங்களின் பதவிக்காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் மீண்டும் மீண்டும் வாக்குகளைப்பெற்று அதிகாரத்திற்கு வருவதற்கு வலிவு அமைகின்றது எனக் குறிப்பிட்டார்.

எனவே மக்கள் இனியும் அப்படி இருக்க முடியாது மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டியது மக்களின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.