கேணல் சங்கர் அவா்களின்
வீரவணக்கநாள் 26.09.2020
குட்ட குட்ட குனிந்து கிடந்த தமிழனின் முதுகெலும்பை நிமிர்தி அவனை அன்னாந்து பார்கும் உயரத்திற்கு உயர்த்தியவர் கேணல் சங்கர் அண்ணன்.
தமிழனை முகில்களோடு உறவாடி விளையாடச்செய்தவர் சங்கர் அண்ணன். வெளிநாடொன்றில் நன்கு கற்று தொழிழ்நுட்ப அறிவை பெற்றிருந்த சங்கர் அண்ணணிண் நட்பை தேசியதலைவர் உளமார ஏற்றுக்கொள்கின்றார்.அன்றுமுதல் தலைவருக்கு அருகிலிருந்து விடுதலைப் புலிகளின் படையியல்சார் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் கேணல் சங்கர் அண்ணன்.
திசைகாட்டி பூமியின் நிலையறிதல் போன்ற ஒரு விடுதலை அமைப்புக்கு தேவையான பாடங்களை ஆண் பெண் போராளிகளுக்கு மிக தெளிவாக துல்லியமாக விளக்கி கற்றுகொடுக்கின்றார்.இதுவே மணலாற்று காட்டுபகுதியில் போராளிகள் நடமாட காரணமாக இருந்தது.பல்துறைசார் அறிவும் ஆளுமையும் நிரம்ப பெற்றிருந்த கேணல் சங்கர் அண்ணன் அவர்களை விடுதலைப்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகளுக்காக தேசியதலைவர் நியமித்திருந்தார்.சங்கர் அண்ணன் பொறுப்பாக இருந்த காலப் பகுதியிலையே தேசிய தலைவர் எண்ணத்திற்கேற்ப கடலிலே முதலாவது கரும்புலி தாக்குதலையும் வெற்றிகரமாக நடாத்தி காட்டியிருந்தார்.
தேசிய தலைவரின் பார்வையில் சங்கர் அண்ணனன்…
“சங்கர் அண்ணை ஒரு அகண்ட அறிவை கொண்டவர் அவருடைய கல்வியும் விஞ்ஞானம் சார்ந்த கல்வி ஆகையால எங்களுடைய போராட்டத்தின் வளர்ச்சியில் சங்கர் அண்ணையின் அறிவு பெரிதும் புரயோசனப்பட்டது.அவருடைய விஞ்ஞான பாடங்களும் அவர்செய்த துறைகள் ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங் இம்மாதிரியான இவரின் புத்திகூர்மைதான் என்னை அதிகம் கவர்ந்தது”
தமிழனின் முதுகில் சிறகைபூட்டிய தானைத் தளபதியே..
முகிலேறி விளையாடும் நினைவாகினாய்…
எங்கள் முதலோனின் நிழலாகி உறவாடினாய்…
விழிமூடி துயில்கின்ற காற்றாகினாய்…
அண்ணண் விடுகின்றே மூச்சே உன் பேச்சாக்கினாய்…
ஓட்டுசுட்டான் மண்ணில் விதையாகினாய்…
முப்படையில் மூன்றாம் படைக்கு அரும்பணியாற்றிய கேணல் சங்கர் அண்ணையின் நினைவுகளை சுமப்போம்.