சஜித்தின் கட்சி அலுவலகத்திற்கு விசமிகளால் தீ வைப்பு?

பொதுத் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலகத்திற்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா ஆடிமுல்லவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திற்கே தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக 5 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் திவுலப்பிட்டிய பிரதான ஏற்பாட்டாளர் ரோஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தினால் அலுவலகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர் பவுஸருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .