Lebanon crisis
இந்த கொரோனா காலகட்டத்தில ஏகப்பட்ட crisis களோட சேர்ந்து Political crisis உம் பல வந்த வண்ணம் உள்ளன.
இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி எல்லார் வாட்ஸ்அப் ஸ்டேடஸிலும் வலம் வந்த வீடியோ லெபனானிலுள்ள பெய்ரூடில் நடந்த அம்மோனியம் நைட்ரேட்டு வெடிப்பு.
அது நடந்த ஒரு சில நாளிலேயே அந்த நாட்டோட Prime Minister Hassan Diab பதவி விலகினாரு.
இதை பாத்தோனே நிறைய பேருHassan எவ்வளவு பெருந்தன்மை வாய்ந்த மனிதர். தன் நாட்டு மக்களுக்காக பதவியை துறக்கிறாருனு பேசுனாங்க.
இது ஒருத்தன் பதவி விலகினா முடியிற சண்டை இல்லனு அவங்களுக்கு தெரியல.
இத தெரிஞ்சிக்க நாம லெபனானோட அரசியல் வரலாற்ற பாத்துட்டு வருவோம்.
2700 டன் அம்மோனியம் நைட்ரேட்டு லெபனானோட தலைநகரான பெய்ரூடில் வெடித்ததில் தான் பிரச்சினை ஆரமித்தது.
லெபனான் துறைமுகத்தை பொறுத்தமட்டில் 2 பேரு தான் controlling authority.
1. Port Authority
2. Customs Authority.
இதுல Port Authority Prime Minister ஓட control லயும், Customs Authority president ஓட control லயும் இருக்கு.
இதுல இந்த இரண்டு பேரோட ஆளுங்களும் ஒருவருக்கொருவர் மோதிகிட்டு, யாரு அதிகமா காசு அடிக்கலாம் பாத்துட்டு மொத்த துறைமுக பராமரிப்பு பணிகளையும் கண்டுக்கவே இல்ல. அந்த வகையில தான் இவ்ளோ டண் அம்மோனியம் நைட்ரேட்டையும் ஒழுங்கா பராமரிக்க தவறியதன் விளைவே இந்த வெடிவிபத்து.
அதெப்படி President ஓட ஆளுங்க, Prime Minister ஓட ஆளுங்கனு 2 பேரையும் பிரிக்கிறிங்க? னு இந்த இடத்தில பல பேருக்கு கேள்வி எழலாம்.
லெபனானின் அரசியல் சிஸ்டமை பொருத்தமட்டில் இந்தியாவை போல அல்ல. சற்றே வேறுபட்ட ஒரு சிஸ்டம்.
Lebanon மக்கள்தொகையில்
27 % ~ சியா முஸ்லிம்களும்
27 % ~ சுன்னி முஸ்லிம்களும்
21 % ~ கிருத்துவர்களும் ( லெபனானில் உள்ள இந்த 21% கிருத்துவர்களும் மெரோனைட் பிரிவினை சேர்ந்த கிருத்துவர்கள். They are similar to protestant in India)
பாக்கி நிறைய மதத்தினை சார்ந்த மக்களும் வசித்து வருகின்றனர்.
1943 ல French யிடமிருந்து சுதந்திரம் வாங்கிய லெபனான், தன்னுடைய மக்கள் அனைவருக்கும் சமஉரிமை வழங்கவேண்டும் என்றெண்ணி ஒரு தவறான முடிவெடுத்தது.
அது,
Prime Minister பதவியில் எப்போதும் சுன்னி பிரிவினையை சார்ந்த முஸ்லிம் தான் நிற்க வேண்டும்.
President தேர்தலுக்கு மெரோனைட் கிருத்துவர்களும், Speaker தேர்தலுக்கு எப்போதும் சியா முஸ்லிம்களும் தான் நிற்க வேண்டுமென்று சட்டம் வகுத்தனர்.
இதுவே நாளாக நாளாக போட்டி பொறாமையில் போனதோடு, யார் அதிகம் கொள்ளையடிக்கிறாங்கனு போட்டி போட்டு Corruption பன்ன ஆரமிச்சாங்க.
நாளடைவில சுன்னிகென்று தனி கட்சியும், சியாகென்று தனி கட்சியும் ஆரமித்து தங்களோட மக்களின் நலனை மற்றுமே ஆதரிக்க தொடங்கினர். அதாவது ஒரு president நாடு எப்படி போன எனக்கென்ன, என் சாதிகாரன் நல்லா இருந்தா போதும்னு நினைச்சா நாடு என்னாகும்?
அது தான் லெபனானில் நடந்தது.
இதுவே லெபனானில் உள்நாட்டு யுத்தத்திற்கு ( Civil war ) வழிவகுத்தது.
இந்த Civil war 1975 இலிருந்து 1990 வரை நடந்தது.
1990 இல் யுத்தம் முடிந்தவுடன் லெபனானில் ஒரு புதிய அரசு மலர்ந்தது.
Civil war க்கு முன்னாடி வரைக்கும் லெபனானில் பிரதமர், ஸ்பீக்கரை காட்டிலும், President க்கே power அதிகமாக இருந்தது. சுருக்கமாக சொல்லபோனால் மெரோனைட் கிருத்துவர்களின் கைதான் அப்போது ஓங்கி இருந்தது. அதை குறைத்து, President ~ Prime Minister ~ Speaker இந்த மூன்று பேருடைய சக்தியையும் சரிசமமாக்கினர்.
சரி இனிமேலாச்சு எல்லாம் ஒழுங்கா நடக்கும், ஊழல் சண்டைகள் குறையும்னு பாத்தா, மேலும் பதற்றம் அதிகமாகிட்டே தான் போச்சு.
நம்ம ஸ்கூல் படிக்கும்போது எல்லா கேங்கலயும் பசங்க படம் பக்கடா மாதிரி ஒருத்தன் இருப்பான். அன்புக்கும் ஜீவாக்கும் சண்டைய தூண்டி விட்டு ஜீவா கூடவே குளிர்காய்வான் பக்கடா.
அதே போல தான் லெபனானுக்கு உள்ள சண்டைய மூட்டி விட்டு குளிர் காயலாம்னு அதோட பக்கத்து நாடுகள் வேலைய பாக்க ஆரமிச்சாங்க.
உதாரணமாக Iran ஒரு சியா நாடு, சௌதி ஒரு சுன்னி நாடு. 2 பேரும் லெபனான் பிரச்சனையில தலையிட ஆரமிச்சாங்க. இதுக்கு மேல சொல்லவா வேணும்.
3 வெவ்வேறு மதப்பிரிவினரும் நாட்டை ஒன்று சேர்ந்து ஆளும்போது Cooperation ~ ஒருவருக்கொருவர் ஒத்துப்போக வேண்டும். மாறாக முரண்டு பிடித்து கொண்டு இருந்தார்கள்.
விளைவு,
பொருளாதார சரிவு
இதுவரை கண்டிராத வீழ்ச்சியை லெபனான் கண்டிர நேர்ந்தது. 36% ஆக வேலைவாய்ப்பின்மை எகிறியது.
இதனால ஒவ்வொரு தலைவனுக்கு கீழ உள்ள மக்கள் அனைவரும் மதத்தின் பேரால இன்னொரு தலைவனின் கீழுள்ள மக்களிடம் சண்டை போட ஆரமித்தனர்.
ஆனால் மேல உள்ள அந்த தலைவர்களோ மக்களிடையே பிரிவினையை தூண்டி விட்டு மேலே அரசு கஜானாவை போட்டி போட்டு காலி செய்து கொண்டிருந்தனர்.
கடைசியில் லெபனான் அரசு பணமில்லாமல் கடன் சுமையில் திண்டாடியது. அதை சமாளிக்க மேலும் மேலும் கடன் வாங்கியது, அதுவுமே மக்களுக்கு போகாமல் முதலாளிகளின் பாகெட்களுக்கே போனது.
இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க மக்களிடம் வாங்கும் வரி பணத்தை அதிகப்படுத்தியது லெபனான் அரசு. அதன் உச்சகட்டமாக Whatsapp பயன்படுத்துவதற்கு கூட வரி வசூலிக்க ஆரமித்தது.
இதனால் கடந்த வருடம் October மாதம் Lebanon இல் மீண்டும் ஒரு புரட்சி வெடித்தது, October Revolution of 2019.
இதன் விளைவாக அப்போதுள்ள லெபனான் பிரதமர் பதவி விலக நேர்ந்தது. அவரு போயிட்டு தான் இப்போ resign பன்ன Prime Minister Haasan Diab பதவிக்கு வராரு.
அவரோட நேரம் கொரோனாவும் அவரு கூடவே சேந்து வந்துருச்சு. இதனால மேலும் நெருக்கடி அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை.
நெருக்கடி அதிகமாகி அதிகமாகி, கடசியில் இந்த பெய்ரூட் வெடிப்பு அதற்கு ஒரு Triggering Point ஆக அமைந்தது. மறுபடியும் மக்கள் தெருவுக்கு வந்து போராட ஆரமித்தனர்.
கடசியில இப்போ Haasan உம் பதிவி விலகிட்டாரு.
அவர் தன்னுடைய கடைசி பிரதமர் உரையில், ” லெபனானில் ஊழல் அதிகமாகிவிட்டது. அரசாங்கத்தால் இனி எதுவும் செய்ய முடியாது. கடவுள் மட்டும் தான் இந்த லெபனான் நாட்டை காப்பற்ற முடியும் ” னு சொல்லிட்டு பதவி விலகிட்டாரு.
இந்த பெய்ரூட் வெடிப்பில் கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்கள் வீடு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இச்சமயத்தில் அரசும் அவர்களுக்கு உதவு முடியாத நிலையில் கைவிரித்து விட்டது.
ஆனால் லெபனான் மக்களோ, அரசியலில் மாற்றம் வரும்வரையில் போரட்டம் நடைபெறும் என்று போராடி வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து பெய்ரூட் வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களும் சேர்ந்தே போராடி வருகின்றனர்..
எதிர்காலத்தை நோக்கி…
நன்றி🙏💕