லண்டனில் மகளை குத்தி கொன்ற தாய்,தானும் தற்கொலை முயற்சி

87
[poll id= “2”]

லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த தாய்..

லண்டனில் மிட்சாமில் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள் வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ள நிலையில் அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கணவன் கூறுகையில், மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும் மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.இருப்பினும் பிள்ளை இறந்து விட்டதாகவும். தாய் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நூற்றாண்டில் மனவழுத்தம் என்பது மிகப்பெரிய சவாலாக எழுந்துள்ளது.பூமிபந்தில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்தாலும் எல்லாம் அமைதியாக தனக்குரிய வழியில் வாழ்ந்துவிட்டு செல்லும் போது மனிதர்கள் மட்டும் தங்களை தாங்களே மனசிறைகளினுள் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள்.சமூக அந்தஸ்து,கட்டுபாடுகளை வரிந்து கொண்டு சுதந்திரத்தை அடகுவைக்கும் இவர்கள்,மனதில் அடக்கப்பட்ட உணர்ச்சிகள் எரிமலையாக ஊற்றெடுக்கும் போது இவ்வாறான விளைவுகள் ஏற்படுகின்றன.இவற்றில் இருந்து நாம் பெறும் பாடங்களை வைத்து நம் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் போதே இவ்வாறானா சந்தர்ப்பங்களை கட்டுபடுத்தலாம்.அல்லாமல் நாம் கண்டும் காணாமலும் கவனமின்மையாலும் அல்லும் பகலும் வேலை என்று காசுக்கு பின்னால் அலையும் போது இந்த மாதிரி சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடப்பதற்கான வாய்ப்புக்களை நீங்களே உருவாக்கி கொள்கின்றீர்கள்.