லண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு!

2753

மேற்கு லண்டனில் Brentfordல் ஈழதமிழர் குடும்பம் ஒன்று தாய்,தந்தை 3வயது ஆண் குழந்தை சடலமாக மீட்பு,இது குறித்து மேலும் தகவல் தெரிவித்த லண்டன் காவல்துறை,வெளியார் யாருக்கும் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.மேலும் இறந்தவர்களின் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர்.40 வயது மதிக்கதக்க ஆண்,30+ வயது மதிக்கதக்க பெண்,அவர்களின் 3வயது ஆண் குழந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக தமிழ் குடும்பங்கள் மத்தியில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர்ந்து தவிக்கமுடியாமல் காணப்படுகின்றது.மேலும் இவை மற்றவர்களையும் தூண்டி,துன்பகரமான சம்பங்களை ஏற்படுத்த முனையும் மாபெரும் உளவியல் யுத்தகளமாக மாறிவருகின்றன.