லண்டன் ‘உயர் ஆபத்து’ அடுக்கு இரண்டிற்கு நகா்கிறது

117

நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் லண்டன் ‘உயர் ஆபத்து’ அடுக்கு இரண்டிற்கு நகருகிறது.

லண்டனில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என எம்.பி-க்கள் தெரிவித்துள்ளனர்.லண்டன் நகரில் முதற்கட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.
அதாவது லண்டன் உயர் எச்சரிக்கை பகுதியாக மாறியுள்ளது. மேலும் மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே மற்றவர்களுடன் பழகக்கூடாது, பப்கள் மற்றும் உணவகங்களில் போன்ற உட்புறங்களில் சந்திக்க தடை விதிக்கப்படும்.6 பேருக்கு மேல் கூடக்கூடாது மற்றும் பப், உணவகங்கள் கட்டாயமாக 10 மணிக்கு மூட வேண்டும் என நாடு தழுவிய அளவில் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் லண்டனில் கூடுதலாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
சுகாதார அமைச்சர் ஹெலன் வாட்லியுடனான கூட்டத்தில் புதிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுக்கு தற்போது விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.லண்டன் மக்களை பாதுகாக்க இந்த கட்டுப்பாடுகள் தேவை என தெரிவித்துள்ள மேயர் சாதிக் கான்,தேசிய அளவில் நடவடிக்கை தேவை எனவும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

TIER TWO (High risk)

Pubs, bars and restaurants must close at 10pm curfew – you can’t meet people outside your household inside, but you can if you’re in pub garden or dining outside.

Gatherings of more than six people are banned, but 15 people can attend wedding ceremonies.Different households are not allowed to meet indoors.

Face coverings are to be worn in areas where mandated, while people should follow social distancing rules and work from work where people can effectively.

New by eelamranjan