லன்டனில் பொலிசார் சற்றுமுன் அதிரடி நடவடிக்கை…

277

லண்டனில் தமிழர் வாழும் சவுத் ஹரோ ( South Harrow) பிரதேசத்தில் பொலிசார் சற்றுமுன் அதிரடி நடவடிக்கை. நவீன ரக கை துப்பாக்கியுடன் ஒரு இளைஞனை கைதுசெய்துள்ளார்கள்.லண்டனில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் சவுத் ஹரோ
( South Harrow) பிரதேசத்தில் பிரித்தானிய காவல்துறையின் ஆயுதம் தாங்கிய சிறப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை சற்று முன் மேற்கொண்டுள்ளார்கள்.வாகனங்கள் உலங்கு வானுர்தி சகிதமாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தப் பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியை வழிமறித்த காவல்துறையினர் அதில் நவீன ரக கை துப்பாக்கியுடன் பயணம் செய்த ஒரு இளைஞனை கைதுசெய்துள்ளார்கள்.
அந்தச் சம்பவத்தில் எதிர்பாரதவிதமாக ஒரு தமிழரும் கைசெய்யப்பட்டு பின்னர் அந்த தமிழ் நபர் விடுதலை செய்யப்பட்டார்.

News by eelamranjan