லண்டனில் புதிய கட்டுப்பாடுகள்

67

லண்டனில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதுடன் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்.

லண்டனில் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து உயர்நிலை பாடசாலை
மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பொதுசுகாதார சேவைகளின் தகவலின் படி லண்டனில் ஒரு இலட்சம் பேருக்கு 191.8 வீதமானர்வர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.இந்த நிலையில் இங்கு மேலும் நிபந்தனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

டிசம்பர் 2ம் திகதியுடன் ஒரு மாத கால முடக்கம் தேசிய ரீதியில் அமுலில் இருந்ததுடன் டயர் முறைமை எனும் கட்டுப்பாடு நிலைகளும் காணப்பட்டன.

இதன்போது 3ம் நிலை அமுலில் உள்ள பகுதிகளில் டேக் எவே உணவு கொள்வனவை தவிர ஏனைய அனைத்து விருந்தோம்பல் நிலையங்களும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரம் தற்போது 2ம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் இங்கு விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லன்டனின் எசெக்ஸ் மற்றும் கென்ட் உட்பட ஏழு நகரங்கள் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் மென் ஹென்கொக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவின் அதிகளவான கொரோனா உயிரிழப்புகள் 62000 ஆக அதிகரித்துள்ளது.

-ஈழம் ரஞ்சன்-