லன்டனில் டையர் 4 எனப்படும் கட்டுப்பாடுகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது

108

லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு கொரோனா பரவல் காரணமாக டையர் 4 எனப்படும் கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ்க்கு முன்னர் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.ஆனால் கிறிஸ்துமஸ் காலக்கட்டத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால், பேரழிவை சந்திக்க நேரிடும் என்று சுகாதார வல்லுனர்கள் எச்சரித்தனர்.அதுமட்டுமின்றி வைரஸ் பிற வடிவங்களில் 70 சதவீதம் வேகமாக பரவுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று பிரதமர் அலுவலத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, பிரதமர் போரிஸ் ஜோன்சன்.லண்டன் மற்றும் தென்கிழக்கில் Tier 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், இது கடந்த தேசிய பூட்டதலின் போது கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளைப் போன்றே இருக்கும்.இது இன்று நள்ளிரவு முதல் நடை முறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். மேலும், போரிஸ் ஜோன்சன் பிரதமராக இந்த நாட்டின் மக்களைப் பாதுகாக்க சரியானதைச் செய்வது கடினமான முடிவுகளை எடுப்பது எனது கடமை.திட்டமிட்டபடி கிறிஸ்துஸை தொடர முடியாது என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதே சமயம் டையர் 1, டையர் 2 மற்றும் டையர் 3 உள்ளவர்கள் கிறிஸ்துமஸ் தினத்திலேயே வீடுகளுக்கு உள்ளே கொண்டாட அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், லண்டன் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்ல முயன்றால் கைது செய்யப்படலாம்.
தலைநகர் Tier 4 பூட்டுதலுக்குள் இருப்பதால், நள்ளிரவுக்குப் பிறகு கடுமையான புதிய பயண விதிகள் நடைமுறைக்கு வரும்.
வெளியேற நினைக்கும் லண்டன்வாசிகள் எவரும் நாடு முழுவதும் வைரஸை பரப்பக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

லண்டன் இன்று நள்ளிரவு முதல் டையர் 4 எனப்படும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளதால், ஜிம், சலூன் போன்றவைகள் மூடப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு கொரோனா பரவல் காரணமாக டையர் 4 எனப்படும் கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று அறிவித்தார்.
இதன் காரணமாக லண்டனில் இருக்கும் மக்கள் இந்த நகரத்தை விட்டு இன்று நள்ளிரவு முதல் வெள்யேற நினைத்தால், அவர்கள் கைது செய்யப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகள் காரணமாக ஜிம்கள், சலூன் மற்றும் சில அத்தியாவசிய கடைகள் இன்று நள்ளிரவில் மூடப்படும் என்று போரிஸ் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர், லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 00.01 மணிக்கு புதிய, கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும்.புதிய கட்டுப்பாடுகளின் படி, தங்கள் வீட்டிற்கு வெளியே ஒருவரை மட்டுமே சந்திக்க முடியும். அதே சமயம், நகரத்திற்கு வெளியே சேர்ந்த நபர் நுழையவோ, இப்பகுதியை சேர்ந்த நபர் வெளியேறவோ கூடாது.இந்த கட்டுப்பாடுகள், கடந்த நான்கு மாதங்களைப் போன்று தேசிய ஊரடங்கைப் போன்று இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.லண்டனின் குறிப்பிட்ட பகுதியில் வசிப்பவர்கள், வீட்டிலேயே இருக்க வேண்டும்.
சட்டத்தில் வரையறுக்கப்பட்ட விலக்குகள் தவிர, அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை கடைகள், உட்புற ஜிம்கள் மற்றும் ஓய்வு வசதி அறைகள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் மூடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Where will be in the new Tier 4 from midnight?

Kent

Buckinghamshire

Berkshire

Surrey (excluding Waverley)

The boroughs of Gosport, Havant, Portsmouth, Rother and Hastings

All 32 London boroughs and the city of London.

Bedford, Central Bedfordshire, Milton Keynes, Luton, Peterborough

Hertfordshire

Essex (excluding Colchester, Uttlesford and Tendring).

-ஈழம் ரஞ்சன்-