லன்டனில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு

9

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 504 பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலி.

இன்று 4 டிசம்பர் 2020 பிரித்தானிய அரசு வெளியிட்ட தகவலின் படி புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 504 இறப்புகள் பதிவாகி உள்ளது. இந்த புதிய தரவுகளையும் சேர்த்து இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 60,617 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளை 69,752 (நவம்பர் 20 ஆம் திகதி பதிவுசெய்த தகவல்) மரணச் சான்றிதழிகளில் அவர்கள் கோவிட்-19 தொற்றுக்குள்ளானதாக அறிவித்துள்ளது.

கடந்த 7 நாட்களில் மட்டும் 3,068 பேரின் இறப்புச் சான்றிதழ்களில் அவர்கள் மரணத்துக்கு கோவிட்-19 என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

புதிதாக இன்று 16,298 புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளது, இந்தத் தொற்றுகளையும் சேர்த்து இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,690,432 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 1,191 (30 நவம்பர்) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். தற்பொழுது (2 டிசம்பர் 2020) மொத்தம் 14,917 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 222,589 பேர் பிரித்தானியாவில் கொரோனா ஆரம்பித்தத்திலிருந்து தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

3 டிசம்பர் ஆம் திகதி மொத்தம் 1,261 பேர் சுவகக்கருவி உதவியுடன் சுவாசிக்கும் சூழலில் இருந்ததாக அரசின் அறிக்கை தெரிவிக்கின்றது.

பிரித்தானியாவில் ஒருவர் மற்றவருக்கு நோயைப் பரப்பும் ஆர் ரேட் (R), 0.8 க்கும் 1.00 க்கும் இடையில் உள்ளது. பொதுவாக இது ஒன்றுக்கு குறைவாக இருந்தால் நோய் கட்டுப்பாட்டில் உள்ளதாகப் பொருள் கொள்ளலாம்.

News by -eelamranjan-