லன்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு நிகழ்வு

306

நேற்றையதினம் 10 Downing Street க்கு முன்னாலும் Ilford லும் தீயாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர் & கேணல் ராஜி க்கும் நடந்த நினைவெளிச்சி நிகழ்வில் இருந்து சில காட்சிகள்.

சன்னங்கள் சன்னதம் கொள்ளும்
சமர்க்களங்களில் விநியோக வழிகள் தடைப்பட்டு உணவு இல்லாமல் பசியால் வாடிய தருணங்களில் ஊரெழு உவந்த எங்கள் உன்னதத்தினை நினைந்ததுண்டு.

பசித்திருக்கும் நாட்களில் எல்லாம்
தியாக தீபத்தின் மனோதிடத்தையும் தியாகத்தையும் யான் மட்டுமல்ல நாங்கள் எல்லோருமே நினைப்பது வழமை.

தியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் அண்ணாவை நினைத்தாலே போதும் ஒரு புதிய உத்வேகமும் உற்சாகமும் உடலெங்கும் கொடிவிட்டுப் படரும்!

வளம் மிக்க வன்னியிலிருந்து கடல்வழியாக குடாரப்பில் தரையிறங்கிய முதல் நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் மட்டுமே கொண்டு சென்ற சின்னஞ் சிறிய பொதி உணவு கைகொடுத்தது.

கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி ஊடான தரை வழிப்பாதை கைப்பற்றப்படும் வரை களத்தில் ‘#கடும்பசி’ எனும் நிலைமையும் சூழ்பகையுடன் எமைச் சூழ்ந்திருந்தது.

பசியிருந்த அந்த நேரங்களில் திலீபன் அண்ணரின் #கொடும்_பசியினை நினைத்த போது எங்கள் அருகிருந்த அற்ப”பசி “
இருந்த இடம் தெரியாமல்
ப(ம)றந்து போனது.

ஆம்,

உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் உத்வேகம் பிறந்தது!

வார்த்தைகளால் வடிக்கமுடியாத
கடினமான அந்த நேரங்களில் எல்லாம் எங்கள் ஆன்மா பலம் பெற்றது!

ஆம், அன்றைய செங்களத்தில் மட்டுமல்ல
“#முள்ளிவாய்க்கால்” காலத்தில் பசித்திருந்த நேரத்திலும் திலீபன் அண்ணாவின் #பெரும்பசியினை நினைத்ததுண்டு.

காதோர முடிகள் முழுவதும் நரைத்துவிடும் நாற்பத்து ஐந்து(45) அகவைகளை கடந்து செல்லும் இந்தப் பொழுதுகளில் “#கந்தசஷ்டி” விரதமும் அனுஷ்டிக்க எந்தன் இல்லாள் கற்றுத் தந்துள்ளாள்.

கந்தன் அருள் வேண்டும் நாட்களில் முருகன் நினைவில் வருவதைவிட திலீபன் அண்ணரே #அடிக்கடி_அகக்கண்களில் தெரிகின்றார்.

தமிழீழத்திலும், தாய்த்தமிழகத்திலும் தமிழர் வாழும் நிலங்கள் எங்கணும் அ(இ)ன்று போல் இனி வரும் எல்லா நாட்களிலும் “#திலீப_ஒளி”சுடர்விட்டுப் பிரகாசிக்கும்!

உலகத்தமிழரின்ஆன்மபலமாய்

என்றும் இருப்பான்
எங்கள் தியாகி திலீபன்
அண்ணன்!🙏

Art by Pugazhenthi K

நன்றி புகழேந்தி ஐயா!