கனிதராத மலட்டு மாமரத்தில் 12 ரக மாவினங்களை ஒட்டி விவசாயி சாதனை

340

கிண்ணியாவில் விவசாயத்துறையில் சாதனை படைத்த 75 வயது முதியவர்!

ஒரு மாமரத்தில் 12 ரக மாமரங்களை உருவாக்கி காய்க்க வைத்து சாதனை படைத்த 75 வயது முதியவர் கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனை எனும் விவசாய கிராமத்தில் தனியாக வாழ்ந்து வரும் அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் என்பவர் தன்னுடைய வீட்டில் பலவகையான பழ மரங்களை பயிரிடப்பட்டு பலன் பெற்று வருகின்றார்

அவரது தோட்டத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட பழ மரங்கள் பயிரிடப்பட்டு பராமரித்து வருவதை காணலாம் இவரது முன்னைய தொழிலானது மேசன் தொழிலாகும் அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் என்பவர் மிகவும் சுவாரஸ்யமானவரும் மரநடுகையில் அதீத ஈடுபாடு காட்டுபவர்.

இவருடைய தோட்டத்தில் பற்பல அரிதான மரங்கள் கானப்பட்டாலும் ஒரே மரத்தில் ஒரு தோட்டமே காணப்படுவதானது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது .

கனிதராத மலட்டு மாமரத்தில் 12 ரக வித்தியாசமான மாவினங்களை ஒட்டுற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். அதில் அளவிலும் நிறத்திலும் பச்சை இன திராட்சையை ஒத்த வடிவில் குலைகுலையாக தொங்கும் அபூர்வ ரக மாங்கனிகளும் உள்ளன.

அம்மா மரத்தில் சிவப்பு இன மாங்காய் காக்கக்கூடிய மா மரம்,கறுத்த கொலம்பான், வெள்ளை கொலம்பான், விளாட், டொமி எனப்படும் மலேசியா இன மாமரம்,திராட்சை போல் காய்க்க கூடிய கூடிய திராட்சை மாம்பழம் என பல இனத்தைச் சேர்ந்த 12 ரக மாங்காய் காய் பதாகவும் மேலும் இரண்டு இன மாமரம் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் விவசாயி தெரிவித்தார்

ஒட்டப்பட்ட கிளைகள் பெறப்பட்ட மாமரம் எப்போது காய்க்கின்தோ அப்போதுதான் அந்த கிளைகளும் காப்பதாக விவசாயி தெரிவித்தார்

ஆறு வகையான மாமரங்கள் ஒரு காலப்பகுதியில் காய்ப்பதாகவும் இன்னும் ஆறு வகையான மாம்பழங்கள் இன்னொரு காலப்பகுதியில் காய்ப்பதாக தெரிவித்தார்

அப்பிள் மரம், திராட்சை, ரம்புட்டான், கொக்கோ, அன்னாசி இதுபோன்ற

மிக அரிய வகை பழ மரங்களும் அவரது தோட்டத்தில் உள்ளது அது மாத்திரமல்லாது தேனீ வளர்ப்பில் அதிக ஆர்வம் உடையவராகவும் காணப்படுகின்றார்

தற்போது கூட மேலும் சில மா மரங்களை ஒட்டுற்பத்தி செய்யப்பட்டு ஒரு மரத்தில் பல இனத்தைச் சேர்ந்த மா மரங்களை உருவாக்குவதை காணலாம் காணலாம்

தற்கால விவசாயிகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக இந்த சாதனை திகழ்வதோடு, ஏனையோருக்கு தூண்டுதலாகவும் அமையும் எனலாம்.

அவரது தோட்டத்துக்கு இன்று சென்றாலும் நீங்களும் பார்த்து இரசிக்கலாம்.

இவ்வாறு வயது முதிர்ந்த காலத்தில் கூட விவசாயி தன்னுடைய சாதனையை வெளிப்படுத்தி இருப்பது அவரை பாராட்டத்தக்க விடயமாகும்.