டிப்பர் மோதி 10 மாடுகள் பலி,காசை தவிர எதுவும் கண்ணுக்கு தெரியாத மனித மிருகங்கள்

72

கிளிநொச்சி – பரந்தன் ஏ-35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளியதில் 10 மாடுகள் உயிரிழந்துள்ளன.இச்சம்வம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.டிப்பர் சாரநி வாகனத்தை நிறுத்தாமல் தப்பி சென்றுள்ளார்.

இந்த உலகம் எல்லா உயிருக்குமானது.மனிதர்களுக்கு எப்படி மனித உயிர்கள் முக்கியமோ அப்படியே மாடுகளுக்கும் மாடுகளின் உயிர் முக்கியம்.இயற்கைக்கு எல்லோருமே சம உயிரினங்கள்தான்.மனிதர்கள் ஆறறிவு என்ற அகந்தை ஏறி ஐந்தறிவு நாலறிவு மிருகங்களை விட கேவலமாக நடந்துகொள்கிறார்கள்.மிருகங்கள் கூட தன் பசிக்கு மட்டுமே வேட்டையாடும்.இந்த ஐந்தறிவு நாலறிவு டிப்பர் சாரதிகளுக்கு சூடு வைக்கும் போதே இவ்வாறான அசமந்தமான வேக ஓட்டங்கள் தவிர்க்கப்படும்.இவர்களுக்கு காணை தவிர வேறு எதுவும் கண்ணுக்கு தெரியாது.