மாடுகள் மீது தாக்குதல்! பண்ணையாளர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்.

21

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் உள்ள மாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அங்குள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறு கூறி சிங்களவர்கள் சிலர் கத்தி,தடிகளுடன் வந்து அச்சுறுத்தி சென்றுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறும், மாடுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரி அந்த பகுதியில் சட்ட விரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் சிலர் பண்ணையாளர்களை அச்சுறுத்தி சென்றுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்றை உளவு இயந்திரத்தினால் அடித்து கொலை செய்துள்ளனர்.

இது குறித்து கரடியணாறு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.