வீரத்தாயின் வீரத்திலகங்களில் ஒரு முத்து….

136

கப்டன் வெங்கடேஷ்.

ஈழ போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத எண்ணற்ற மாவீரர்களின் வரிசைகளில் வெங்கடேஷ்,உம் இணைகிறான்,சண்முகசுந்தரம்-ஜீவாகரன் எனும் இயற்பெயரை கொண்ட வெங்கடேஷ் சிறு வயது தொட்டே சுட்டிதனமும்,சுறுசுறுப்பும்,ஆளின் வயதிற்கு மிஞ்சிய மூளையும் கொண்டவன்,அதனாலேயே அவனுக்கு ஊரில் “ஜப்பான்” என செல்லமாக அழைப்பார்கள்,உண்மையிலும் அவன் ஜப்பான்தான்,

அவனை ஒத்த பிள்ளைகள் எல்லாம் பந்தடிப்பதும்,மாபிள் விளையாடுவதுமாக இருக்கும் போது அவன் மட்டும் மூத்த போராளிகளின் தியாகங்களை எண்ணியே சிந்தித்த வண்ணமும் அதை பற்றி தனது நெருங்கிய நண்பர்களிடமும் எப்போதும் பேசியபடியே இருப்பான்.

இவருக்கு ஏற்றவாறு போராட்டம் வளர்ந்து வந்த நேரம் அதில் ஈர்க்கபட்டு புறப்பட்டு விட்டார் போராட்டத்திற்கு,அப்போது இவர் தனது 18வயதை எட்ட சிலகாலம் இருந்த காரணத்தால் திருப்பி அனுப்பி இருந்தார்கள் ஆனால் அவன் அடம்பிடித்து சேர்ந்து விட்டான்,என்ன வேலை? இவரது வயதெல்லை வரும் வரை பிரசுரங்களை ஒட்டுவதும்,பதாகைகள் தயாரிப்பதும் என கொடுக்க பட்டு இருந்தது அதை செப்பனே செய்து முடிப்பார்.இந்தியாவிலும்,ஈழத்திலும் பயிற்சிகளை பெற்று திரும்பியவுடன் மிகத்திறமையான போராளியாகவும்,அவரது போர் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரிகள் திணறுவதையும் பல நேரங்களில் சக போராளிகள் கூறுவார்கள்,ஆரம்பகாலங்களில் கடற்புலிகள் தோற்றுவிக்கபட முன்னர் வெங்கடேஷ் ஒரு சிறந்த படகோட்டி,குறிப்பிட்ட சில மணித்துளிகளுக்குள் தமிழக கரையோரங்களிலும்,அடுத்த சில மணிகளுக்குள் ஈழகடலோரங்களிலும் காட்சி கொடுப்பான்,எடுத்த பொறுப்பை கச்சிதமாக செய்து முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பான்,எப்போதும் எதையாவது சாதித்தே ஆகவேண்டும் என்று சிந்தித்த வண்ணமும்,அதற்கு செயல் வடிவமும் கொடுத்த வண்ணமும் இருப்பான்,இவரது செயல் திறனை கண்டு இவருக்கு பயிற்றுவித்த ஆசான்களே,முக்கிய பொறுப்புகளை இவரை தேர்தெடுத்து கொடுப்பார்கள்,சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் நிற்பார்.

இவர் பயிற்சி பெற்று ஈழத்திற்கு திரும்பிய சில காலத்திலேயே இந்திய-இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டு இந்திய இராணுவம் வெறிகொண்டு ஈழ மக்களை தாக்கிய நேரம், இவரது போராட்டத்திற்கு ஒரு சவாலும் மைல் கற்களுமாகும், பல நேரடி மோதல்களில் பங்கெடுத்து விழுப்புண்களும் அடைந்து ஓரிரு நாட்கள்தான் இருப்பான்,மீண்டும் தனது இலக்கை நோக்கிய வண்ணமே…..

ஓர் நாள் மாலை வேளை முக்கிய தகவலை பரிமாறும் நோக்கோடு நெல்லியடியில் இருந்து பயணித்தார் வல்வைட்டித்துறை நோக்கி,இவரது உந்துருளியில் இவரது உற்ற நண்பன் ரவாசும் இருந்தார் இருவரும் திக்கம் சீனித்தொழில்சாலையின் பாதையை நெருங்கிய வேளை,இந்திய இராணுவத்திற்கு இவரும் இவரது நண்பன் மொறிசும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்கள்.எங்கே எங்கே என இந்திய இராணுவம் இவர்களை மோப்பம் பிடித்த வண்ணமே துரோகிகள் மூலம் உளவறிந்து இவர் போகும் பாதையை சுற்றி வளைத்து விட்டார்கள் இருவரும் மாட்டி கொண்டார்கள் இராணுவ முற்றுகையை உடைக்க முடியவில்லை இரவு நேரம் எவன் எங்கே நிற்கிறான் என தெரியாத வேளையும்,தங்களிடம் இருந்த ஆயுதத்தால் இருவரும் போராடினார்கள் சுற்றி வளைத்தவர்களோ பல பத்துபேர்கள் அடங்கிய இராணுவத்தினர் இனி தப்ப முடியாது என்ற இறுதி கட்டத்தை உணர்ந்து கொண்ட வெங்கடேஷ் தனது பிஸ்டலால் தனதுயிரை மாய்த்து கொண்டார்,உயிர் போன பின்னும் ஆத்திரம் அடங்காத இந்திய இராணுவம் அவரை உயிரோடு பிடிக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவரையும்,ரவாசையும், கால்களில் கயிறு போட்டு கட்டி கிட்டதட்ட 8கிலோமீட்டர்கள் அவர்களது ட்ரக்கின் பின்பக்கத்தில் கட்டி றொட்டால் இழுத்தே சென்று மந்திகை வைத்தியசாலையில் போட்டு இருந்தார்கள்.இந்திய-இலங்கை பல நேரடி மோதலில் பங்கெடுத்து இந்திய இராணுவத்திற்கு “சிம்மசொப்பனமாக” திகழ்ந்தார் என்பது குறிப்பிட தக்கது எண்ணற்ற வீரர்களில் வெங்கடேஷும் அடங்குகிறார்.