பிரான்ஸ் மாவீரா் நாள்

14

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் முதன் முறையாக வல்லரசு தேசமான பிரான்சு மண்ணில் , நவம்பர் 27 ஐ
“தமிழீழ தேசிய மாவீரர்”
நாளாக அங்கீகரித்து தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீராக வீரச்சாவை தழுவிய
லெப் சங்கர் அவா்களுக்கும் மாவீரச் செல்வங்களுக்குமான நினைவுத்தூபியினை நிறுவியுள்ள பிரான்சு மக்களின் சார்சல் மாநகரசபைக்குட்பட்ட நெல்சன் மண்டலா சதுக்கத்தில் , சர்வதேச சமூகத்துடன் இணைந்து எமது மாவீரர்களை நினைவுகொள்வோம் வாரீர்.

உங்களது வரவு ஒரு நிகழ்வாக முடியாமல் சர்வதேச அரங்கில் தமிழீழ விடுதலைக்கான அரசியல் அங்கிகாரத்தை நோக்கிய தொடக்கமாக இருக்கட்டும். நிற்ச்சயம் வெல்வோம் தமிழீழம் என்ற நெஞ்சுரத்தோடு மாவீரர் முன்னிலையில் சபதம் எடுப்போம் வாருங்கள்.
உங்களது வரவை முன்பதிவு செய்து உங்களுக்கான நினைவு வணக்க நேரத்தை பெற்று தற்போதைய கொவிட் 19 இன் தாக்கத்திற்கான தற்காப்பை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
நன்றி.