நெஞ்சினிலே வீரம் தொலைந்துகண்களிலே ஏக்கம் வளர்கிறதே
இன்று மிச்சமிருக்கும் கம்பீரம் இங்கேமதுரை மீனாட்சியம்மன் கோபுரம் மட்டும்தான்
பாண்டிய நாட்டுப் பறவைகள் கூடகதைகளில் கோழைக்கு வீரம் சொல்லும்
அவன் சுமந்து வந்த தமிழ் மக்களே ஏழ்மையிலும் விழாத உன் வீரமெங்கே?
மண்டியிடாத உன் மானம்
வண்டிகட்டி போனதெங்கே தெவிட்டாத உன் வாய்த்தமிழ்
தெவிட்டிவிட்ட மாயமென்ன வாய்க்குள்ளே வாளைப்போல் வளைந்து
நாவின்மேல் பால் சுரந்த தமிழெங்கே
தாலாட்டு முதல் விளையாட்டு வரை
விண்ணுலகம் வியக்கும் உன் கலையெங்கே
விளைச்சல் பூமியில் கரைபுரண்ட நதிகள்
விரிசல் விழுந்து பூமி பிழந்து கிடக்கிறதே
அதிலே பாய்ந்து விழுந்தோடிய நீர் எங்கே
அதைச்சுற்றி விளையாடிய தமிழச்சிகள் எங்கே
வீரமும் காதலும் தமக்கே உரியதென
பொன்னும் மண்ணும் குறையா பூமியிதோ
மன்னர் ஆயினும் நீதி நீதியென
சொன்ன நகர் மதுரை மாநகர்
சொந்த மொழியை விற்றுவிட்டு
வந்த மொழியை பற்றிக்கொண்ட
தமிழ்த்தாய் தொப்புள் கொடி உறவுகளே
தன்மானம் காத்த தமிழ்க் கதைகள் தெரியாதோ
எல்லாம் விதியென்று சொல்லிவிட்டு
உன் மதியை எங்கே அடகு வைத்தாய்
சுதந்திர தேசத்து சுவாசக் காற்றினை
வேற்றொருவன் கைக்கு ஏன் கொடுத்தாய்
தமிழச்சி மானத்தை கருவருத்தபோது
திமிரி வந்து தடுத்திருக்க வேண்டாமா
அவன் கைகளை வெட்டி எடுத்து
கொல்லையிலே கொட்டியிருக்க வேண்டாமா
தன்மானத் தமிழா தலைக்குனிந்து நில்லாதே
வரலாற்றுத் தமிழனின் மானத்தை விற்காதே
அடித்த இடத்திலே எதிரியைத் திருப்பியடி
கொடுத்த இடத்திலே உரிமையை திருப்பியெடு