மாற்றம் காணாத சிங்கள மகா வம்ச மனநிலை

55
[poll id= “2”]

இன்றைய கோத்தா தலைமையிலான எதாச்சாதிகார ஆட்சியையும் முழமையான இராணுவ மயமாக்கலையும் சிங்கள தேச மக்கள் முழுமையாக ஆதரித்து நிற்கிறார்கள் என்பதற்கு கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் மனங்களில் திட்டமிட்ட முறையிலோ அல்லது தானகவோ ஏற்ப்பட்டுவிட்ட மனநிலையையே அது புடம்போட்டுக் காட்டுகிறது.

குறிப்பாக பாராளுமன்ற ஆட்சிமுறைமை குறித்த அவர்கள் நம்பிக்கை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தே வந்துள்ளது. அதிலும் குறிப்பாக நல்லாட்சி என தன்னை அழைத்துக் கொண்ட கடந்த ஆட்சிக்காலத்தில் அது அதழபாதாள நிலையை அடைந்துள்ளது. அதேபோன்று அரசியல் கட்சிகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து பெரும் நம்பிக்கையீனமாக வெளிப்பட்டு நிற்கிறது.

ஆனால் அவர்களின் படைகள் மீதான நம்பிக்கை மட்டும் தொட்ந்தும் பெரும் நம்பிக்கையாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தும் ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அவை ஒரு வரைபடமாக கீழே தரப்பட்டுள்ளது. இதையையே ஆயுதமாகக் கொண்டு கோத்தா தனது இராணுவ மயப்பட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார்.

சிங்கள மக்களிடம் நாம் சென்று சிங்களத்தில் பேசுவதால் அவர்கள் மனங்களில் பெருமாற்றம் ஏற்ப்பட்டு வருகிறது என கனவு உலகில் வடை கூடும் நம்மவர்கள் இன்றைய யதார்த்த புறநிலையை விளங்கிக் கொண்டதாகவோ அல்லது அதற்கேற்ற வகையில் தமிழர் தரப்பு திட்டமிடலை சிந்திப்பதாகவோ இல்லாத நிலை பேரச்சம் தருவதாக உள்ளது.

இன்றைய சிங்கள மனநிலையே மேலும் வலுப்படுத்தப்பட்டு ஒரு சனாதிபதித் தேர்வை சிங்கள வாக்குகளைக் கொண்டே தீர்மானிக்கலாம் என்ற நிலையையும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையூடாக தாங்கள் விரும்பகின்ற சிங்கள தேச இருப்பை மட்டும் வலுப்படுத்துகின்ற ஒரு புதிய அரசியல் யாப்பின் அமுலாக்கல் என்றவகையில் இது விரைவுபடுத்தப்படுகிறது.

நன்றி – Nehru Gunaratnam