பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷ் துப் பாக்கிச் சூட் டில் பலி.இலங்கையின் பாதாள உலக குழுத் தலைவனும், போதைப் பொருள் வர்த்தகருமான மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெ ரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துர மதூஷை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக் கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள மீதும் தோட் டாக்கள் பாய்ந்து உள்ளன.சம்பவத்தில் மாகந்துர மதூஷ் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 22 கிலோகிராம், ஹெரோயின், 02 பிஸ்டோல்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

துபாயில் தலைமறைவாகி இருந்த அவர், கடந்த ஆண்டு அந்நாட்டில் நடத்திய விருந்துபசாரம் ஒன்றில் துபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.அவருடன் 31க்கும் மேற்பட்டோர் இதன் போது கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.