“வணக்கம்” விடைபெறுகிறேன்! – மஹிந்த தேசப்பிரிய உருக்கம்!

182

” இனி இந்த இடத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தமாட்டேன். விடைபெறும் நேரம் வந்துவிட்டது.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக செயற்படும் மஹிந்த தேசப்பிரிய, இன்னும் ஓரிரு வாரங்களில் ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.