கோத்தபாயா ராஜபக்சா – ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு
மகிந்த ராஜபக்சா – பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்
சமல் ராஜபக்சா – நீர்ப்பாசன அமைச்சர்
நாமல் ராஜபக்சா – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
சஷிந்திர ராஜபக்சா – உயர் தொழில்நுட்பம் -அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சு
பசில் ராஜபக்சா – அமைச்சர் பதவிக்கு நிகரான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இவ்வாறு இலங்கை திறைசேரியின் 70% மான நிதி மூலங்கள் ராஜபக்சா குடும்பத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதைவிட மாத்தறை மாவட்ட அபிவிருத்திசபைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் மகிந்தராஜபக்சாவின் தங்கையின் மகன்.இலங்கை வரலாற்றில் ஒரு குடும்பம் இத்தனை பொறுப்புகளை இப்போதுதான் பெற்றிருக்கிறது.
அதேவேளை தமிழ் மற்றும் முஸ்லிம் மலையக மக்களுக்கு உரிய அமைச்சுகள் வழங்கப்படவில்லை.ஒரு குடும்பத்தின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு நாடு நகர்கிறது.அது நாடு தழுவிய பாரிய எதிர்ப்பு போராட்டங்களை மிக விரைவில் சந்திக்கப் போகிறது.புதிய உலக இயங்கவியலில் முடியரசுகள்,பண்ணையாளர்கள் குடும்ப ஆட்சிகள் எல்லாமே தோற்கடிக்கப்பட்டு,இல்லாதல் ஒழிக்கப்பட்டு வரும் வேளையில்,சிறிலங்கா அரசை திரும்பவும் மஹிந்த குடும்பம் கைப்பற்றியுள்ளது.போர் முடிந்த 6 ஆண்டுகளில் சிங்கள மக்களால் நிராகரிக்கட்ட குடும்ப ஆட்சி,அடுத்து வந்த ஆட்சி அதைவிட மோசமானதால்,மீண்டும் ராஜபக்ச குடும்பத்திடமே சரண்டைந்துள்ளனர் சிங்கள மக்கள்,
இவர்கள் தங்களை காத்து கொள்ளவும் பதவி அதிகார ஆசைகளிலும் அரசை,பெரும்பான்மை சிங்கள மக்களின் குருட்டு ஆதரவுடன் கைப்பற்றியுள்ளனர்.மேற்குலகம் தனது வேலையை எந்த பக்கத்தில் எப்ப ஆரம்பிக்கும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி,சீனா-மேற்குல மோதலும்,சீனா-சிறிலங்கா உறவுகளுக்கும் இடையில் நிகழ போகும் உரசல்கள்,சமனிலைதன்மைகள்,கடன் சுமைகள் எல்லாமே சேர்ந்து சிறிலங்காவை உலுக்க போகின்றது.