போர்க்காலத்திலும் அதற்குப் முன்னரும் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோருக்கு நட்டஈட்டை வழங்குவது குறித்து எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக ஶ்ரீலங்கா பிரதமரும் இனப்படுகொலையாளியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என கூறப்படும் சிலர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர், சிலர் உள்நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும், அவ்வாறு கண்டுபிடிக்கப்படாதவர்கள் மரணித்திருக்கலாம் என்றும் கூறினார்.ஜேவிபி காலத்திலும் இவ்வாறான சம்பவங்களின் போது நட்ட ஈடு வழங்கப்பட்டதாகவும்,எனினும் பலர் வெளிநாடுகளில் வசித்துவிட்டு திரும்பி வந்ததாகவும் தெரிவித்தார்.
போரில் காணாமல் போன அனைவரும் மரணித்துவிட்டார்கள் என்றும் அதற்கு விடுதலைபுலிகள்தான் காரணம் என்றும் இனப்படுகொலையாளியின் சகோதரரும்,தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்ச,ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் பொறுப்பில்லாமல் குறியிருந்தமை குறிப்பிடதக்கது.வயசான காலத்தில் மஹிந்தவை கைம்பொம்மையாக்கி சிறுபான்மையினரை ஏமாற்றும் அல்லது தட்டி கழிக்கும் ஒரு புது போக்கை ஶ்ரீலங்கா அரசு கடைபிடித்துவருகின்றது.இது தொடர்பான எந்த தகவல்களும் ஶ்ரீலங்கா ஜனாதிபதி வாயை திறப்பது இல்லை.சிறுபான்மையை பிரித்து மஹிந்தவிடம் கொடுத்து பொழுதுபோக்குக்கு அரசியல் நடாத்தி வருகின்றனர்.இது ஆபத்தான ஒரு வழிகளை எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா அரசு சந்திப்பதற்கு ஏதுவாக அமைவதுடன்,அதை வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கான திட்டங்களும் சிங்கள இனப்படுகொலையாளி அரசிடம் இல்லாமல் இருக்காது.