மண்டை விறைப்பு நோயால் அவதிப்படும் மஹிந்த…சிகிச்சைக்கு சிங்கபூர் செல்வாரா?

115

•கேட்பவன் கேணையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்று சொல்வார்கள்!

செய்தி – புத்தரின் போதனைகள் மூலம் கொரோனோவை வெற்றி கொண்டுள்ளோம் – சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச

நம்பிட்டோம் பிரதமர் அவர்களே! அப்படியே அந்த கிளிநொச்சிவரை வந்தவிட்ட வெட்டுக்கிளி கூட்டத்தையும் புத்தரின் போதனைகள் மூலம் விரட்டிவிடுங்கள்.

அடுத்து, மலையகத்தில் நேற்றும் ஒரு பெண் குளவிக்கடியால் இறந்துள்ளார். அந்த குளவிகளையும் கொஞ்சம் புத்தரின் போதனைகள் மூலம் கலைத்து விடுங்கள்.

தமிழர்களின் கிழக்கு மண்ணில் தொல்பொருள் ஆய்வு செயலணி நியமித்துள்ளீர்கள். அதில் ஒரு தமிழருக்குகூட இடமளிக்கவில்லை. அதற்கும்கூட புத்தரின் போதனைகள்தான் காரணமா பிரதமர் அவர்களே?

அடுத்தமுறை இந்தியா சென்று திருப்பதி வெங்கடஜலபதியை வணங்கும்போது உங்கள் நண்பர் மோடிக்கும் புத்தர் போதனைகள் சிலவற்றை கூறிவிடுங்கள்.

ஏனெனில் அவர் இந்தியாவில் கொரோனோவுக்கு கை தட்டுங்கள் விளக்கு பிடியுங்கள் என்று உளறிக் கொண்டிருக்கிறார். இப்ப கடைசியாக கொரோனோவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்.