ஈஸ்டர் சிறிலங்கா குண்டுதாக்குதல் விசாரணைகளில் திருப்தியில்லை – கத்தோலிக்க திருச்சபை காட்டம்,மஹிந்த உருட்டல்

51

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த முழுமையான விசாரணைகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாக இனப்படுகொலையாளியும் சிறிலங்கா பிரதமரான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களிலும் நடத்திய தாக்குதல்களில் 250க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்தக் கொடூரத் தாக்குதல்கள் குறித்து அப்போதைய அரசாங்கமும் அதேபோல தற்போதைய மஹிந்த-கோட்டா தலைமையிலான அரசாங்கமும் நடத்துகின்ற விசாரணைகளில் திருப்தி ஏற்படவில்லை என்பதை கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை பலதடவை கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் தீவிரவாதம் இயக்கம் ஒரு கிழமையின் பின்னர் தூக்கத்தில் இருந்து எழுந்து உரிமை கோரியிருந்தமை குறிப்பிடதக்கது.அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சிங்கள மக்களிடையே எழுந்த தம் பாதுகாப்பு பற்றி கேள்விகுறியே,மஹிந்த-கோட்டாவின் இன்றைய அரசு அமைய முதல் காரணம்,அத்துடன் அன்றைய அரசில் இருந்த கையாலாத மைத்திரி,குண்டு வெடிப்பு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னதும் குண்டு வெடிப்பின் பின்னர் சிறப்பாக செயற்பட்டார் என்று மைத்திரிக்கு சர்வதேச விருது கொடுத்தமையும் குறிப்பிடதக்கது.குண்டு வெடித்து அடுத்த நாள் மக்கள் பயத்தில் உறைந்திருக்க,இறந்தவர் குடும்பம் கதறிகொண்டிருக்க,கோட்டபாயா தான் அரசியலுக்கு வருவதாக கூலாக அறிவித்தமையும் குறிப்பிடதக்கது.வடகொரிய ஆயுதங்கள் புலிகளிடமிருந்து கைப்பற்றி,ராஜபக்ச அவன்கார்ட் தனியார் ஆயுத கம்பனியூடாக ஐஎஸ் அமைப்பிற்கு விற்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.இப்போது சிறிலங்கா குண்டுதாக்குதலுக்கு ஐஎஸ் பொறுபேற்பு.

எல்லா புள்ளிகளையும் இணையுங்கள்,வழிகிடைக்கும் புரிந்தவர்கள் தோற்றுபோவதில்லை.

சிறிலங்கா சிங்களவர்கள் அவர்கள் கையாலேயே ராஜபக்ச குடும்பத்தை அரசில் அமர்த்தி,தம் தலையில் மண்ணை போட்டு கொண்டுள்ளனர்.முழுதாக போட்டு முடித்ததும் சிறிலங்காவையும் சிங்களவர்களையும் அடக்கம் செய்ய ஆள் இருக்குமா என்று தெரியவில்லை.