வாக்களிப்பதற்கு விடுமுறையளிக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை -மகிந்த!

வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விடுமுறை வழங்காத நிறுவனம் மற்றும் வர்த்தக நிலையங்களின் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுத்தேர்தல் தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய அறிவிக்கையில்..

இதுவரையில் விடுமுறை கிடைக்கப் பெறாத ஊழியர்கள் தேர்தல் ஆணைக்குழுவிலோ அல்லது தொழிற் துறை ஆணைக்குழுவிலே விரைவாக முறைப்பாடு செய்யுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும்குறிப்பிடுகையில்,

புறக்கோட்டை பகுதியில் சிறுகடைகளில் தொழில்புரியும் ஊழியர்கள் நாளைமறுதினம் இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு வாக்களிக்க செல்வதற்கு விடுமுறை வழங்கப்படவில்லை. என்ற முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடு ஜனாநாயகத்துக்கும் தேர்தல் சட்டத்திற்கும் முரணானது.

;தனியார் நிறுவனங்களுக்கு வாக்களிப்பு தினத்தில் விடுமுறை வழங்குவது தொடர்பில் உள்ள சிக்கல் நிலையினை கருததிற் கொண்டு தூர அடிப்படையில் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவும் தெளிவுப்படுத்தப்பட்டது.

இதுவரையில் விடுமுறை கிடைக்கப் பெறாத ஊழியர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிலோ அல்லது தொழிற்துறை ஆணைக்குழுவிலோ விரைவாக முறைப்பாடு செய்யுங்கள். இவ்வாறான நிறுவன அதிகாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும் என்றார்.