மகிழ்ச்சியில் பிரதமர் போரிஸ் ஜோன்சன்.

13

பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி திட்டம். மகிழ்ச்சியில் பிரதமர் போரிஸ் ஜோன்சன்..பிரித்தானியாவின் கோவிட் தடுப்பூசி திட்டத்தின் தொடக்கத்தை பிரதமர் போரிஸ் ஜோன்சன் வரவேற்றுள்ளார்.இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இன்று COVID-19 க்கு எதிராக இங்கிலாந்தில் முதல் தடுப்பூசிகள் தொடங்குகின்றன. எங்கள் என்.எச்.எஸ்., இந்த தடுப்பூசியை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும், அனைத்து தன்னார்வலர்களுக்கும் – மற்றவர்களைப் பாதுகாக்க விதிகளை பின்பற்றி வரும் அனைவருக்கும் நன்றி. இதை நாங்கள் ஒன்றாக வெல்வோம்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட உலகின் முதல் நபரான 90 வயது மூதாட்டி.

பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசியை உலகிலேயே முதல்நபராக 90 வயது மூதாட்டியான மார்க்ரெட் கெனென் என்பவருக்கு போடப்பட்டுள்ளது.இதன் மூலம், அதிகாரப்பூர்வாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை மார்க்ரெட் கெனென் பெற்றுள்ளார்.

பிரித்தானியா நேரப்படி சரியாக காலை 6.31 மணிக்கு மார்க்ரெட்டுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.தற்போது முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்கு பின்னர் செலுத்தப்பட உள்ளது.இதேவேளை மேற்கத்திய உலகில் கோவிட் தடுப்பூசி போட்ட நபர்களில் முதல் இந்திய வம்சாவளி நபராக 87 வயதான ஓய்வுபெற்ற இன நல்லினக்க நிபுணர் ஹரி சுக்லா பெறுமை பெற்றுள்ளார்.

பிரித்தானியர்களாக நாம் இருப்பது பெருமையான விடையம் என்று, வணக்கம் பிரித்தானியா TV நிகழ்வில் தோன்றிய அமைச்சர் மட் ஹனொக் அழுதுகொண்டே தெரிவித்த விடையம்,செய்திகளில் முன் நிலை வகித்து வருகிறது.

-ஈழம் ரஞ்சன்-