ஈழ தமிழ் அரசியலில் யாழ்ப்பாண மையவாதம் என்ற சொல்லை அதிகம் உச்சரித்த வாய்களில் மலையகமும் அடங்கும்.எந்த பஞ்சாயத்தில் சிக்கினாலும் தவறாமல் யாழ்ப்பாண மையவாதம் என்ற சொல்லை உச்சரித்து முக்தி பெற்றுவிடுகிறார்கள்.அண்மையில் முரளி – விஜய் சேதுபதி பிரச்சினைகளிலும் பரவலாக யாழ்ப்பாணத்தவர்களும் மலையகத்தவர்களும் மோதி கொண்டனர்.காலங்காலமாக மலையக தமிழர்களின் பொதுவான குற்றசாட்டு,யாழ் மையவாதம் சாதி பார்த்து தங்களை ஒதுக்கி வைக்கின்றது,தங்களை வடக்கத்தயான் என்று லேபல் இட்டு சிறுகுடிகளாக சித்தரிக்கின்றது என்பதுவே!
இன்னொரு கூட்டத்தினரின் யாழ் மையவாதம் மீதான குற்றசாட்டு,ஒற்றுமையில்லாத சாதி பாகுபாடுளோடு பெருந்தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு கள்ளதோணிகளில் வியாபாரம் செய்பவர்கள். பாரம்பரிய சிறுகோவில் வழிபாடுகளில் ஈடுபடும் தங்களை கூலிக்காரர்களாகவே தொடர்ந்து வைத்திருக்க விரும்புகின்றனர் என்பதாகும்.இவற்றில் தங்களை தொழிலாளர் வர்க்கம் சோசலிசம் என்றும் யாழ் மையவாத கும்பலை வட்டி மனப்பான்மை முதலாளித்துவ வர்க்கம் என்ற பார்வையில் காட்டி கொள்கின்றனர்.
இங்கு இரு பகுதியினர் மேலும் தவறுகள் உள்ளன.யாழ் மையவாதம் என வெளியில் அழைக்கப்பட்டாலும்,அது யாழ்ப்பாணத்தினுள் செய்கின்ற கொடுமைகள் எண்ணிலடங்காது.தவிர மலையகத்தவர்கள் யாழ் மையவாதம் மேல் அடுக்கும் சாதிய வன்ம குற்றசாட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும்,மறுபக்கம் மலையகத்தில் தம்மை அடக்கி ஆண்டு உழைப்பை சுரண்டிய கங்கானி பரம்பரைக்கு இன்று வரை ஓட்டு போட்டு சம்பள உயர்வு கேட்டு கொண்டுள்ளனர்.இவர்கள் யாழ் மையவாதத்தை வம்புக்கு இழுப்பது,தமது தாழ்வு மனப்பான்மை வாழ்வை நியாப்படுத்துவதற்காகும்.
போய் வேற வேலை இருந்தால்,பாருங்கடா என்பது போன்ற ஒன்றைதான் மலையகத்தவர்களுக்கு சொல்ல முடியும்.ஏனெனில்..யாழ் மையவாதம் வட்டி மனப்பான்மையில் ஊறி,உலகம் முழுதும் அகதி போர்வையில் சென்று செட்டில் ஆகிவிட்டது.இவனுக கூட இருக்கிறவங்களையே வாழவிடமாட்டாங்க,அவங்களை வம்புக்கு இழுத்து உங்கள் இயலாமை பலவீனங்களை மறைக்க முயலாமல் உள்ளதை வைத்து உங்கள் வாழ்க்கையை மீட்டு வாழ பாருங்கள் மலையகத்தவர்களே!
- பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு நாள்
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் பிரித்தானியா
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நிகழ்வுகள் பிரித்தானியா
- அன்றே கூறினாா் எம் ஈழத்தின் கவிஞா்
- லன்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு நிகழ்வு