பக்கம்-1
மணலாற்றுக்களங்கள் நீண்ட நெடிய வரலாறு கொண்டது.
சிங்கள இந்திய இராணுவங்கள் எண்ணற்ற தடவைகள் புறமுதுகிட்ட களமுனை.
தமிழர்களின் போராட்டத்தை பலமாக தாங்கிய மண் அது.
இந்திய சர்வதே சக்திகளின் ஆயுத, தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனைகளுடன் இலங்கை பேரினவாத இராணுவம் இனவழிப்பு யுத்தத்தை முன்னெடுத்து தமிழர்களை இனப்படுகொலை செய்து, தமிழர்நிலங்களை ஆக்கிரமித்த நேரம் அது.
2008 ஆண்டின் சித்திரை 27 ம் நாள் மணலாறு களமுனையில் முன்னேறிய இராணுவத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் தளபதி சொர்ணம் தலைமையிலான புலிகள்.
தளபதி சொர்ணம் அவர்களின் திட்டங்களை எவ்வாறோ தெரிந்து கொண்ட எதிரி புலிகளின் நகர்வுகளை குறிவைத்து இடைவிடாத எறிகணைத்தாக்குதல்களை மேற்கொள்கின்றான்.
சர்வதேசத்தின் ஆயுத விநியோகங்களை சீராக பெற்ற எதிரியின் இடைவிடாத எறிகணைத்தாக்குதல்கள் புலிகளின் நகர்வுகளை தடுத்துநிறுத்தியது.
ஓயாத புலிகள் மறுநாளும் தம் தாக்குதல் முயற்சிகளை தொடர்கின்றனர்.
தளபதி சொர்ணம் அவர்களின் வழிகாட்டலில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை ஓரளவு வெற்றியினையும் தருகின்றது.
ஆனாலும் எதிரியின் இடைவிடாத எறிகணைத்தாக்குதல்கள் பதுங்குகுழிக்குள் செல்ல மறுத்து போர் புரிந்த தளபதி சொர்ணம் அவர்களிற்கு காயத்தை ஏற்படுத்துகின்றது.
கழுத்திலும், கண்ணிற்கு மேல் உள்ள புருவத்திலும் எறிகணைத்துண்டுகள் ஏற்படுத்திய காயத்திலிருந்து இரத்தம் பீறிட்டுப்பாய்கின்றது.
சத்திரசிகிச்சை மூலம் எறிகணைத்துண்டுகளை அகற்றவேண்டிய தேவை ஏற்படுகின்றது.
அதற்காக களமுனையில் இருந்து சொர்ணம் அவர்கள் நகரவேண்டும்.
ஆனால் உறுதியாக அதை மறுத்த தளபதி சொர்ணம் அவர்களிற்கு பதுங்குகுழியின் வெளியே அதிகாலை சூரிய ஒளியின் வெளிச்சத்தில் மயக்கமருந்து கொடுக்கப்பட்டு கடும் எறிகணை வீச்சுகளிற்கு நடுவே சத்திரசிகிச்சை மேற்கோள்ளப்படுகின்றது.
சத்திரிசிகிச்சை முடிந்து, மயக்கம் தெளிந்ததும் கணிரென்ற குரலில் தளபதி சொர்ணம் அவர்களின் கட்டளைகள் ஒலிக்கின்றது.
அவ்வாறுதான் இறுதிவரை புலிகள் போராடினார்கள்.
தமிழின விடுதலைக்காய் தமை மறந்து,
தம் மனைவி, குழந்தைகளை மறந்து,
தம் அன்பிற்குரியவர்களை மறந்து,
இறுதிநொடி வரை களமாடிய எம் மறவர்களைப் போற்றுவோம்..
எமக்காக விதையான எம் மாவீரர்களின் நினைவுகளுடன்… “இந்திய, சர்வதே சக்திகளின் ஆயுத, தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனைகளுடன் இலங்கை பேரினவாத இராணுவம் இனவழிப்பு யுத்தத்தை முன்னெடுத்து தமிழர்களை இனப்படுகொலை செய்து, தமிழர்நிலங்களை ஆக்கிரமித்த நேரம் அது.