ஆறாத ரணங்களுக்கு
நடுவே….!
கொஞ்சம் கொஞ்சமாக
என்னைக் கொல்லும்
சுடுசொற்களுடன் கூடிய
உயிரைப் பறிக்கும்
கொடூர நோய்களுக்கு
நன்றி கூறி…
மனதை கல்லாக்கி
நம்பிக்கையை மட்டும்
என்னுள் ஆழ வேரூன்றி
நிலைமாறும் உலகில்
நானும் வாழ்ந்திடத்தான்
ஆசைகொள்கிறேன்..!
வஞ்சக மனிதா்களின்
சொல்லிடையில்
சிக்கித்தவிக்கும்
குட்டி மான் நான்!
என்ன செய்வேன் கடவுளே…!
மென்மையான
என்னுள்ளத்தில் சிலா்
குத்திச் செல்லும்
போதும்கூட…
இன்னும்
தன்னம்பிக்கையை
என் ஆயுதமாகக் கொண்டு
உங்கள் அனைவா்
முன்னும் வீரப்பெண் போல்
உலா வருகின்றேன்!!
உங்கள் எல்லோரைப்போலும்
சாதிக்க முடியும்
என்ற மனவுறுதி
கொஞ்சமும் தளராமல்…..!
க.பொம்மை
28.08.2020