இன்று கல்வித்திணைக்களம் விடுத்துள்ளள அறிக்கையில் பிரான்சில் இந்த வாரம் மட்டும் பதினையாயிரம் மாணவர்களிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் 6 சே, 11 கொலேஜ், 63 பாடசாலைகள், என 80 கல்வி மையங்களும், 2018 வகுப்புகளும் கொரோனாத் தொற்றினால் மூடப்பட்டுள்ளது.
Toulouse, Orléans-Tours (துலூஸ், ஓர்லியோன்-தூர்) , Créteil (கிறித்தை ) கல்வித்திணைக்களங்களின் பாடசாலைகள் கொலேஜ்கள், மற்றும் லிசேக்கள் பல கொரோனத் தொற்றினால் மூடப்பட்டுள்ளன.
Nancy-Matz (நோன்சி-மெட்ஸ்) கல்வித்திணைக்களத்தின் வகுப்புகள் 2000 இற்கும் மேல் மூடப்பட்டுள்ளன.
தற்போதுள்ள கொரேனாத் தொற்றானது இளம் பிள்ளைகளையும் சிறுவர்களையும் தாக்குகின்றது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் 15.484 மாணவர்களிற்கும், பாடசாலை ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், பணியாளர்கள் என 1.809 பேரிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மாணவர்களிற்குத் தொற்று உறுதிசெய்யப்படும் நிலையில் பொருளாதாரத்தை மட்டும் கருத்திற்கொண்டு பாடசாலைகளை மூட, கல்வியமைச்சும், அரசாங்கமும் மறுத்து வருகின்றன.