முன்னணியிலிருந்து மணி நீக்கப்பட்டார்! சுரேஸ் பொறுப்பேற்றார்

186

த.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

கட்சியினதும் கட்சி மத்திய குழுவினதும் முடிவுகளை ஏற்கமறுத்து, நிராகரித்து அதற்கு எதிராக செயல்பட்டமையாலும், கட்சி, மத்தியகுழு முடிவுகளுக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட்டமையாலும் , வி.மணிவண்ணன் கட்சி இருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் மட்டக்களப்பு அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் ( இரசாயனவியல் ஆசிரியர் – மட்டக்களப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உப செயலாளராக திருமலை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் சிறி ஞானேஸ்வரன் ( கணக்காளர்) நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி அறிவித்துள்ளது.