தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலக்கு வைக்கப்படுகிறார்களா?

நெல்லியடி நகரப்பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் பரப்புரை துண்டுப்பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்த ஜவர் கைதாகியுள்ளனர்.முன்னணியின் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்த போது தேர்தல் கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து ஜவரும் கைதாகியிருந்தனர்.

துண்டுப்பிரசுரம் வழங்கிக் கொண்டிருப்பவர்கள் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட டீசேர்ட் அணிந்து இருந்தமையால் ஆதரவாளர்கள் நான்கு பேரும் வாகனச் சாரதியுமாக ஜவர் கைதாகியிருந்தனர்.

கைதானவர்கள் நெல்லியடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையின் பின்னர் ஐந்து பேரும் ஆள் பிணையில் விடுதலை செய்;யப்பட்டனர்.

இதனிடையே வாகனம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. ஐந்து பேரையும் நாளையதினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நெல்லியடி நகரப்பகுதியில் பல அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை நடத்திச் சென்றார்கள். எனினும் இவர்கள் மட்டும் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.