தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் ஊடக பேச்சாளராகவும் தொடர்ந்தும் செயற்படுவேன் என்று மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயக விரோதமானது என்று தெரிவித்துள்ள மணிவண்ணன் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்று தனது கட்சித் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவத்துள்ளார்.
தலைமை செயலகத்தில் ஊடக சந்திப்பை மேற்கொள்ளயிருந்த மணிவண்ணன் வலுகட்டாயமாக வெளியேற்றம்!
குறிப்பாக தன் மீதான பிரதான குற்றச்சாட்டாகிய வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுக் கொண்டமை குறித்த கருத்துத் தெரிவித்த மணிவண்ணன் தன்னுடைய தனிப்பட்ட தேவைக்காக எவரிடமும் இருந்து பணம் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்று வலியுத்தித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்பதாலும் மத்திய குழு எடுத்த தீர்மானம் ஜனநாயத்திற்கு எதிரானது என்பதாலும் தானே தொடர்ந்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஆகவும் ஊடக பேச்சாளராகவும் செயற்படுவேன் என்பதை மக்களுக்கு அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.