மன்னாரில் பாண்டிய மன்னனின் புராதன சின்னங்கள்?

70

மன்னார் – நானாட்டான், வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1900 மேற்பட்ட நாணயக் குற்றிகள் மற்றும் சட்டி பாணை ஓட்டுத் துண்டு போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிங்கள தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஈழ தமிழரின் அடையாளங்களை ஈழ தமிழரே பாதுகாக்க வழி வேண்டும் என்ற கோசங்கள் வலுத்துள்ளன.

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாண்டியர் மற்றும் ஈழ தமிழர் அடையாளங்களாக இருக்க கூடிய மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1900 நாணயக்குற்றிகள் மற்றும் தொல்பொருட்கள் முட்டாள்தனமாக வரலாறுகளை மாற்றும் சிங்கள பௌத்த தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை காணியின் உரிமையாளரால் புதிய வீடு அமைப்பதற்கு அத்திவாரம் அமைக்க குழி தோண்ட முற்பட்ட போதே குறித்த பழங்கால பொக்கிசங்கள் மீட்கப்பட்டன. குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உப தவிசாளர் குறித்த விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனை தொடர்ந்து குறித்த நாணயக் குற்றிகள் முருங்கன் பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயக் குற்றிகள் யாவும் மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக தொல் பொருள் தினைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.