எனக்கொரு கனவு உண்டு – மார்டின் லூதர்

197

எனக்கொரு கனவு உண்டு. ஒரு நாள் அடிமைகளாக பண்ணைகளில் வேலை செய்யும் கறுப்பின கூலித்தொழிலாளியின் மகனும், நிலப்பிரபுவின் மகனும் ஒன்றாக அமர்ந்திருந்து தமது இராக்கால உணவை அருந்துவார்கள், எனக்கொரு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு இன்று இது சாத்தியமற்றதாக இருக்கலாம் ஆனால் என்றோ ஒருநாள் அமெரிக்கதேசத்தின் செனட் சபையின் ஒரு அங்கத்துவராக

கறுப்பினத்தவர் ஒருவர் கால்பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..’ என்று நம்பிக்கையுடன் கறுப்பினத்தவருக்கு வலுவூட்டி கர்ஜித்தார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால் அவற்றை பார்ப்பதற்கு அவர் இருந்திருக்கவில்லை. ஆனால் அவர் விதைத்த வலுவூட்டல் இலட்சியத்தின் விதைகள் அவர் கூறியதைவிட பல

மடங்கு வியாபித்தது என்பதே யதார்த்தம். அவர் கனவுகண்டது அமெரிக்க செனட் உறுப்பினராக கறுப்பர் ஒருவரை ஆனால் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவே கறுப்பர் ஒருவர் அந்த கனவுகளுக்கான அறுவடையானார். இங்கே அந்த வலுவை ஒரு சமுதாயத்திற்கு விதைத்தவன் இல்லாமல்போனாலும் அவனது இலட்சியக்கனவுகள்,

அவன் ஊட்டிய வலுக்கள் எப்போதும் மரித்துப்போவது கிடையாது.எண்ணங்கள் வார்த்தைகள் திரும்ப திரும்ப சொல்லப்படுவதால் பலிக்கும் என்ற எண்ணம் எங்கள் மூதாதையர்களுக்கும் இல்லாமல் இல்லை. அந்த மரபில்

வந்தபடியேதான் இன்று யாராவது நம்மை பற்றி நல்லதாக பல தடவைகள் சொன்னால்,உங்கள் வாய்க்கு இனிப்பு போடவேண்டும் என்றும், யாராவது திரும் திரும்ப அபசகுனமாக பேசினால் போய் வாயை கழுவுங்கள் என்று அதட்லாகவும்

சொல்கின்றோம். இராமாயணத்தில் கடல்கடக்க அனுமன் தயங்கியபோது ஜாம்பவான்உட்பட சேனைகள் அத்தனையும் அனுமனை வலுவூட்டியதையும், மஹாபாரதத்தில்

அர்ஜூனனுக்கு மதுசூதனன் கொடுத்த வலுவூட்டலையும் நாம் மறந்தவர்கள் அல்லர்.உன்னால் முடியும் என்பது! என்னால் முடியும்!! என்று முழுமையாகநம்பப்பட்டால் அதை முடிப்பதற்கு இதைத்தவிர வேறு மந்திரங்கள் தேவை இல்லை.

எவன் ஒருவன் ஒரு செயலை செய்ய தொடங்கும்போதும், எந்த இடர்வரினும்பின்வாங்காமல்;, நான் பின்வாங்குபவன் அல்ல!!! ‘என்னால் முடியும’; என்று

இறுதிவரை விடாமல் தன்னை நம்பி முயல்கிறானோ கண்டிப்பாக வெற்றி எனும்தேவதைஅவனது அத்தனை வேர்வைகளையும், சோதனைகளையும், அவமானங்களையும் வெற்றி மாலையைஅவன்மேல்சூட்டி போக்கிக்கொள்வாள்.

Janarthanan