யாழ்ப்பாணம் மாதகலில் இலங்கை கடற்படையினரால் தமிழர் நிலத்தை தன்வசப்படுத்தும் முகமாக மாதகலில் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டது குறித்த ஆக்கிரமிப்பை பொது மக்களின் பேராதரவோடு தடுத்து நிறுத்தப்பட்டது.பொது மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ் களத்தில் நின்றிருந்தார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த மக்கள்,இராணுவ அத்துமீறல்கள் எமது மண்ணில் இடம்பெற ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை என்றும்,எமது இருப்பை தக்க வைத்து கொள்ள தொடர்ந்து போராட போவதாகவும் தெரிவித்தனர்.