குடிகாரர்களுக்கு மாற்று பெயர் தற்போது மதுபிரியர்கள்.. அதேபோல்
சாதாரணமாக குடிப்பவர் – மதுவன்பர்
குடித்துவிட்டு தகறாறு செய்பவர் – மதுவம்பர்
குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் – மதுஜம்பர்
குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் – மதுகம்பர்
மது பங்க்கர் – எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர்.
மது பந்தர் – குடித்துவிட்டு குரங்குச்சேட்டை செய்பவர்..
மது சிந்தர் – வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..
மது சித்தர் – உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர்
மது சிங்கர் – குடித்தால் மட்டும் பாடுபவர்..
மது சங்கர் – சங்கத்து ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர்
இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் மதுநோன்பர்
வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர் மதுவெம்பர்
எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் மதுதெம்பர்
குடித்து நிறைய உளறுபவர்-மது ரம்பர்
மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர் : மதுபம்பர்
குடித்துவிட்டு தர்மம் செய்பவர் மதுதர்மர்.
குடித்துவிட்டு உளறுபவர் மதுசலம்பர்
குடிக்காமலேயே உளருபவர் மதுவந்தி
பெண் குடிகாரர் – மது பிரியா
Sivakumar