எப்படி கேட்பது…!

186

கர்ப்பிணியாக இருந்த யானை வெடி வைத்து கொடுக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டு இறந்த செய்தியை நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது.

பல விசயங்களில் முன்னுதாரணமாக இருக்கும்

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட சேட்டன்களின் தேசத்திற்கு என்னதான் ஆச்சு..

இப்படி வெடியை வைத்து யானைக்கு பழம் கொடுப்பார்களா.. எப்படி மனசு வந்திருக்கும்.. இப்படி ஒரு காரியத்தை எப்படி ஒருவனால் செய்ய முடியும்.. அப்படி செய்திருந்தால் அவன் சைக்கோவாகவே இருக்க முடியும்..

சில ஆண்டுகளுக்கு முன் மது என்ற பழங்குடி இளைஞர் அரிசி திருடியதாக சொல்லி அடித்து கொல்லப்பட்ட துன்பகரமான வடுவே மறையாத நிலையில் இப்போது இந்த கொடூரம்..

வெடியால் வாய் காயம் பட்ட நிலையிலும் அந்த தாய் யானை யாரையும் தாக்காமல் அமைதியாக ஆற்றில் போய் நின்று கொண்டு தற்கொலை செய்து கொண்ட செயல் இருக்கிறதே.. அதுதான் இந்த கொடூரமான மனித இனத்திற்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரும் தண்டனை..

கொல்லப்பட்ட தாய் யானையிடமும் அதன் சிசுவிடமும் எங்களை மன்னித்துவிடு என்று எந்த முகத்தை வைத்து கேட்பது என்று தெரியவில்லை..

ஆம்.. மனிதர்கள் நாங்கள் மிக கொடூரமானவர்கள்.. 🙁

-நன்றி கார்ட்டூனிஸ்ட் பாலா

Bala G

B