மற்றுமொரு பாடசாலையின் வகுப்பறை மூடப்பட்டது!

பாரிசில் கொரோனா வைரஸ் காரணமாக இரு வகுப்பறைகள் மூடப்பட்டதை அடுத்து, தற்போது மற்றுமொரு பாடசாலையின் வகுப்பறை மூடப்பட்டுள்ளது.

பொது சுகாதார நிறுவனம் (L’Agence régionale de Santé) இத்தகவலை வெளியிட்டுள்ளது,

(04/09/2020) Plessis-Robinson (Hauts-de-Seine) நகரில் உள்ள Joliot-Curie மழலையர் பாடசாலையில் இந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இங்கு பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த வகுப்பறை மூடப்பட்டது.

புதிய கல்வியாண்டு ஆரம்பித்த அடுத்தடுத்த நாட்களில் பாடசாலையின் வகுப்பறைகள் மூடப்பட்டு வருகின்றமை வருத்தம் அளிப்பதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


பகிருங்கள்.. உங்கள் கருத்துக்களை பதியுங்கள், மேலும் இது போன்ற பல தகவல்களைப் பெற எமது பக்கத்தை தொடருங்கள்… follow = see first