வலி வடக்கில் அவர் மக்கள் பணத்தில் அழகான பளிங்கு மாளிகை அமைத்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் அதற்காக நீங்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.
ஆயுதப் போரில் பலர் தங்கள் பிள்ளைகளை ஆகுதி ஆக்கிய போது தனது மகன் கலைஅமுதனை பத்திரமாக இந்தியாவில் வைத்து சீராட்டி வளர்த்து தனது அரசியல் வாரிசாக வலி வடக்கு பிரதேச சபையின் உறுப்பின்ராக திடீரென மாற்றிய கில்லாடி இந்த மாவை சேனாதிராஜா !
வாரிசு அரசியல் செய்யும் அவரை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.
ரணில் ஆட்சியில் வடக்கில் நிழல் அமைச்சராக செயற்பட்ட அண்ணன் மாவை
மாகாண சபை முதல்வர் பதவியை தனது கனவாக கொண்டிருந்தாலும் விக்னேஷ்வரனுக்கு டீல் போட்டு விட்டு கொடுத்த அண்ணன் மாவை
சாதி சனம்,பரம்பரையாக தமிழரசுகட்சிக்கு வாக்கு போட என்றே ஒரு அடிமை கூட்டத்தை உருவாக்கி தனக்கு பின்னால் வைத்து கொண்டுள்ளதற்காக…
தமிழரசு கட்சியின் தலைவர் என்ற பெயரில் வெட்டியாக சுத்தி கொண்டுள்ளதுக்காக..
கட்சியில் இருக்கு பெரியவர் முதல் இளையவர் வரை ஊழலை கற்று கொடுத்து செதுக்கியதுக்காக…
2003 பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி வாக்கு போதாமல்,கச்சேரியில் நின்று,இன்று வந்தவர்கள் எல்லாம் வாக்கு எடுத்துவிட்டு என்னை தெருவில் விட்டு விட்டார்களே என்று புலம்பியதற்காக..
தேர்தல்களில் பலரை பலிகொடுத்தாவது வாக்குகளை எடுத்து,சிறிலங்கா நாடாளுமன்ற கதிரைகளை சுட்டத்துக்காக
தேர்தல் காலத்தில் வழக்கம் போல் தமிழர்கள் உரிமை கைதிகள் விடுதலை காணாமல் போனவர்கள் கதை என்று அளந்து விடுவதில் கில்லாடி அவருக்கு நீங்கள் தவறாது இம்முறை யும் வாக்களிக்க வேண்டும்.