சரியான ஒரு பிரதிநிதிக்கு சரியான பிரதேசத்திற்கு வாங்கப்பட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்.புதிய ஒருவரின் வரவு புதிய மாற்றத்தை உண்டு பண்ணலாம் அம்பாறை மாவட்டத்தில்.பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் கலையரசனுக்கு எனது வாழ்த்துக்கள்….
#வழங்கப்பட்ட தேசியப் பட்டியலுக்கு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக பேசிய அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு சரி எதை எதிர்பார்க்கிறார்கள் மாவை சேனாதிராஜாவிடம் இனியும்.அதிலும் சித்தார்த்தன் வேடிக்கையாக உள்ளது தனது முதிர்ந்த வயது பதவியைத் இளைய சமுதாயமும் ஒப்படைக்க தகுதியில்லாதவர் தனக்கு ஒரு முதிர்ச்சி அடைந்த ஒரு துணையைத் தேடுகின்றார் மேடைதோறும் இருவரும் தூங்கி எழும்புவதற்கு….
#நடந்து முடிந்த தேர்தலில் மக்களாக தீர்ப்பை வழங்கிவிட்டார்கள் காணும் உங்களுக்கான அரசியல் காலம் என்று.அதைவிட உங்களிடமிருந்து அரசியல் துன்பத்தை அனுபவிக்க இனியும் மக்கள் தயாரில்லை என்பதை வாக்குகளின் மூலம் தெரியப் படுத்தி விட்டார்கள் சிறந்த முறையில்.இப்பொழுதும் இவரின் ஆசை விட்டபாடில்லை பிறரை கில்லிவிட்டு பதவியை அடைய ஆசை கொள்ளும் பதவிப் பிரியர்…..
#எத்தனை தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டார்.இந்த தடவை மக்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னும் சரியான ஒருவருக்கு பதவி வழங்கப்பட்ட போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இவரிடம் எப்பொழுதுமே இல்லை கடந்த காலத்திலும் இதுதான் உண்மை.ஆனால் மேடைகள் தோறும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்போம் புதியவர்களை அரசியலுக்குக் கொண்டு வருவோம் இது வெறும் வாய் வார்த்தை இதன் காரணமாகத்தான் இவரை வெடிகுண்டு மாவை என்று அதிகமானவர்கள் இன்றுவரை கூறுகிறார்கள்…..
#இப்பொழுது இவர் அமைதி அடைந்து விட்டார் என்று நம்பி விடாதீர்கள் மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து அதற்கான வாக்குறுதி கிடைக்கப் பெற்றதன் பின் தான் இந்தப் பதவியை விட்டுக் கொடுத்து இருப்பார் எனது எண்ணத்தின் பிரகாரம்.கட்டிலில் படுத்திருந்தது அரசியல் செய்யும் தலைவரால் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கலாம் இன்னுமொரு கட்டிலை வடக்கிலும் உருவாக்குவதற்கு….
#ஒரு தேசியப்பட்டியலை விட்டுக்கொடுக்க முடியாத இவர்களிடம் இலங்கை அரசிடம் முட்டி மோதி எமக்கான தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்று நீங்கள் நம்பும் வரை இந்தக் முதிர்ந்த கூட்டங்கள் உங்களை ஆண்டு கொண்டுதான் இருக்கும்.குறிப்பிட்ட அளவுதான் இந்த தடவை வெற்றியடைந்து உள்ளீர்கள் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக தமிழ் வேட்பாளர்கள் சார்ந்து.இன்னும் விழிப்படைய வேண்டி இருக்கின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து…
#இப்பொழுதும் சொல்கிறேன் இன்னும் அதிகமான விஷப்பாம்புகள் இப்பொழுதும் கூட்டமைப்புக்குள் இருக்கின்றார்கள் அவர்கள் களையெடுக்க படவேண்டியவர்கள் காலம் வெகு விரைவில் இவர்களையும் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் ஓய்வாக இருந்து உணவருந்த கடந்த காலத்தை எண்ணி…