சுமந்திரன்,சிறிதரனை விமர்சித்த,மகளிர் அணி கட்சியை விட்டு கூண்டோடு கலைப்பு – மாவை கோரம்

110

இந்த முறை பாராளுமன்ற தேர்தல் உங்கள் வாக்கு யாருக்கு...

View Results

Loading ... Loading ...

தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை – மாவை

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாகிய சுமந்திரன் மற்றும் சிறீதரன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்ட தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் மற்றும் நால்வர் வெளியிட்ட விமர்சனமானது, தமிழ் அரசுக் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி தலைமைக்கு தெரிவிக்காமல் இத்தகைய செய்தியினை வெளியிட்டிருந்தமைக்கு எதிராக, சம்மந்தப்பட்டவர்கள் மீது கட்சி தலைமை உடனடியாக அவர்களை கட்சியில் இருந்து நீக்கி அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை உடனடியாக எடுக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சரியோ தவறோ கைப்பிள்ளைகளுக்கு சொந்தமாக பேசுறவர்கள்,சுதந்திரமாக நடப்பவர்களை கண்டால் பிடிக்காது.அதெப்படி கட்சிக்கு தெரிவிக்காமல் கருத்து வெளியிடலாம் என்றால்? கட்சி கைப்பிள்ளைகளாகதான் எல்லோரும் இருக்க வேண்டுமா? மேல இருந்து ஒருவர் இருவர் சொல்வதை மட்டும்தா பாடமாக்கி ஒப்புவிக்க வேண்டுமா? அரசியல்வாதிகள் என்னதான் தங்களுக்குள் அதிகாரத்திற்காக புரண்டு அடித்து கொண்டாலும்..சில விடயங்களில் ஒற்றுமையாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சி..சுமந்திரன்,சிறிதரன் அணியுடன் நடக்கும் பனிபோரிலும் – மாவை சரவணபவன் அணி இந்த விடயங்களை அவர்களுக்காக செய்வதில் தெரிகின்றது அவர்களின் அரசியல் வண்டவாளம்…